சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய 'அரசு மானியங்கள்' கருத்தரங்கு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையும், சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கமும் இணைந்து 19-01-2014 அன்று காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, "அரசு மானியங்கள்" என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான இலவசக் கருத்தரங்கு ஒன்றை சிங்கப்பூர் பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா கலையரங்கத்தில் நடத்தியது.

சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் தலைவரும், கணக்காய்வாளருமான திரு. ரா. நாராயணமோகன் இக்கருத்தரங்கை நடத்தினார். சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத்தின் தலைவரும், "புதிய நிலா" இதழின் ஆசிரியருமான திரு. மு. ஜஹாங்கீர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.

JMC's alumni association's seminar on Govt. subsidies

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் தலைவர் ஆடிட்டர் முனைவர் திரு. முஹிய்யத்தீன் அப்துல் காதர் தலைமையேற்று நடத்திய இக்கருத்தரங்கில், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. மு. ஹரிக்கிருஷ்ணன், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் செயலாளர் திரு மு. அ. மசூது, இந்திய முஸ்லிம் பேரவையின் செயலாளர் திரு. நிஜாமுதீன், "சிங்கை முஸ்லிம் முரசு" இதழின் ஆசிரியர் திரு. ஹபீப் முஹம்மது, சிங்கப்பூர் காயல்பட்டினம் நலஅபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதி முனைவர் திரு. முஹம்மது லெப்பை மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து பயன்பெற்றனர். சங்கத்தின் செயலாளர் திரு. அப்துல் சுபஹான் நன்றி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+