அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: துணை அதிபர் ஜோ பிடன்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அந்நாட்டின் துணை அதிபர் ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன், பெர்னி ஸ்டாண்டர்ஸ் களமிறங்கியுள்ளனர்.

ஹிலாரி கிளிண்டன் பல மாதங்களுக்கு முன்பே தமக்கு ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டார். பெர்னி ஸாண்டர்ஸும் அதேபோல் தமக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இருவரும் பல்வேறு மாகாணங்களில் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனிடையே துணை அதிபர் ஜோ பிடன் அதிபர் தேர்தல் களத்தில் குதிப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ஜோ பிடன். இதனால் ஹிலாரி கிளிண்டனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications