ரகசியங்களை மறைக்க ஜான் எப் கென்னடியின் மூளையைத் திருடிய அவரது தம்பி...
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியின் மூளையை அவரது தம்பி திருடி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் 38வது அதிபராக பதவி வகித்த கென்னடி 1963ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், பிரேத பரிசோதனையின் போது அவரது மூளை அகற்றப்பட்டதாகவும், அதனை அவரது தம்பி பத்திரப்படுத்தி வருவதாகவும் சர்ச்சைக்குரிய தகவல்களை தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஒருவர்.
இது குறித்து மேலும் அப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...

சுட்டுக் கொலை....
அமெரிக்காவின் 38-வது ஜனாதிபதி ஆக இருந்த ஜான் எப் கென்னடி, கடந்த 1961 முதல் 1963-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி தனது 46-வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்றவாளி...
இதுதொடர்பாக லீ ஹார்லி ஓஸ்வால்டு என்பவன் கைது செய்யப்பட்டான். அவர் இறந்த 2 நாட்களுக்கு பிறகு ஜேக்ரூபி என்பவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

எண்ட் ஆப் டேஸ்...
இந்நிலையில் ஜேம்ஸ் சுவான்சன் என்ற எழுத்தாளர் கென்னடி குறித்து ‘என்ட் ஆப் டேஸ்' என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் சுட்டுக் கொல்லப்பட்ட கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது மூளையும் உடன் சேர்ந்து புதைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

லாக்கரில்...
மேலும், கென்னடியின் மூளையை அவரது தம்பி ராபர்ட் கென்னடி திருடி விட்டதாகவும், தற்போது அதனை ஒரு கன்டெய்னரில் மறைத்து லாக்கரில் பத்திரப் படுத்தியுள்ளார் எனவும் புகார் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ்.

ரகசியங்களை மறைக்க...
மரணமடைவதற்கு முன் கென்னடி எவ்வளவு உடல் பாதிக்கப்பட்டிருந்தார், எவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொண்டார் என்னும் தகவல்களை அழிக்கும் பொருட்டு கென்னடியின் மூளை திருடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்படவில்லை...
கடந்த 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கென்னடியின் மூளை மற்றும் பிற திசுக்களின் மாதிரிகள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால், இன்றுவரை அதனை கண்டுப்பிடிக்க இயலவில்லை என அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications