சைக்கிள் ஓட்டிய போது தவறி கீழே விழுந்து விபத்து... ஜான் கெர்ரியின் கால் முறிந்தது!
ஜெனிவா: பிரான்ஸ் நாட்டில் சைக்கிளில் சென்றபோது, தவறி கீழே விழுந்ததில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி கால் முறிந்தது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார் ஜான் கெர்ரி. இவர் ஈரான் அணுஉலை ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த, ஜெனீவா சென்றிருந்தார். தீவிர சைக்கிள் பிரியரான ஜான் கெர்ரி, எந்த நாட்டிற்கு சென்றாலும், தன்னுடன் ஒரு சைக்கிளை எடுத்துச் செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று ஜெனீவாவில் இருந்து 30 மைல் தொலைவில், பிரான்ஸ் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில், சைக்கிள் சவாரி செய்து கொண்டிருந்தார். ஜான் கெர்ரிக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கார்களில் பாதுகாப்பிற்கு சென்றனர்.
அப்போது, ஒரு இடத்தில் நடைபாதையில் இருந்த பெரிய கல் மீது ஜான் கெர்ரியின் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறிய ஜான் கெர்ரி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது வலது கால் முறிந்தது.
உடனடியாக, ஜான் கெர்ரியை மீட்ட அவரது பாதுகாப்புப் படையினர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் ஜான் கெர்ரி ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைக்கிள் ஓட்டியபோது தவறி விழுந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான்கெர்ரிக்கு காயம் ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications