ரூ. 6 கோடிக்கு ஏலம் போக இருக்கும் ஜான் லெனானின் “கிதார்”!
லண்டன்: இசைத்துறை ஜாம்பவான்களில் ஒருவரான, இங்கிலாந்து நாட்டின் ஜான் லெனான் பயன்படுத்திய கிதார் ஒன்று கிட்டதட்ட 6 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படும். இந்த பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இந்த பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் போகும்.
அந்த வகையில் இங்கிலாந்து பாடகர் வாசித்த கிதார் ஒன்று ரூபாய் 6 கோடி வரை ஏலத்துக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய ஜான் லெனான் கடந்த 1980 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இசையுலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவில் ஒருவரான இவர் கடந்த 1967 ஆம் ஆண்டு நடந்த ஒரு பாடல் ஒலிப்பதிவின் போது கிரட்ஸ் ரக கிதாரை வாசித்தார்.
ஒரு ஆண்டுக்குப்பின் இந்த கிதாரை தனது உறவினர் ஒருவருக்கு அவர் வழங்கினார். இந்த கிதாரை லண்டனை சேர்ந்த ஏல நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.
ஜான் லெனான் பயன்படுத்திய முக்கியமான கிதார்களில் இந்த கிரட்ஸ் கிதாரும் ஒன்று என்பதால் இது 1 மில்லியன் டாலர் அதாவது சுமார் 6 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என ஏல நிறுவனம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications