இடுப்பு மாற்று சிகிச்சை வழக்கு: பாதிக்கப்பட்டோருக்கு ரூ.15,000 கோடி வழங்கும் ஜான்சன் அன்ட் ஜான்சன்

Subscribe to Oneindia Tamil

Johnson & Johnson to pay $2.5bn to settle hip replacement suits
வாஷிங்டன்: இடுப்பு மாற்று சிகிச்சைக்கு தவறான உபகரணங்களை வழங்கியதால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 15,000 கோடி நஷ்டஈடு தர ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முன் வந்துள்ளது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணத்தை தயாரித்தது. அதை அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அந்நிறுவனம் குறிப்பிட்ட அந்த பொருளை சந்தையில் இருந்து வாபஸ் பெற்றது. இந்நிலையில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட 8,000 அமெரிக்கர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 கோடி நஷ்டஈடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முன் வந்துள்ளது. 2014ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே அந்த நிறுவனத்தின் உபகரணத்தை அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் பொருத்திய இந்தியர்களில் 94 சதவீதம் பேருக்கு அதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகள் தெரியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+