ஓ மை காட்.. ஜோர்டானை உலுக்கும் வெள்ளம்.. வீடியோ பாருங்க!
Recommended Video

அம்மான்: ஜோர்டான் நாடு வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது.

ஜோர்டான் நாட்டில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது அந்த நாடு. இதுவரை 11 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.
Flash flooding in Petra pic.twitter.com/X8K5syKE3k
— HeyReno (@BCandDoubleP) November 9, 2018
நாள் முழுக்க பெய்த பேய் மழையால் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழமையான நகரான பெட்ரா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கல் நகரம் என்று இதற்குப் பெயர் உண்டு.
Down #Wadi_Musa, #Petra #flash_floods tourism street @JITours pic.twitter.com/frpYz9VVsK
— Mohammed Salman Almarat (@mohammed_amarat) November 9, 2018
வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க பல்வேறு படைகள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தலைநகர் அம்மானுக்கு தெற்கில் உள்ள மடபா பகுதியும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
I was in Petra today. Heavy floods. Hope everyone is safe! #petra pic.twitter.com/xz8WseEMto
— Tom Aerts (@TOM_AERTS_) November 9, 2018
காணாமல் போன பலரைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அல் ஜாபர் பகுதியில்தான் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மான் பகுதியில் சிக்கித் தவித்த 100 சிரிய ராணுவத்தினருக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மான், பெட்ரா, மடபா பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. பெட்ராவில் கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் ஓடுகிறது. வெள்ளம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் அதிர வைப்பதாக உள்ளன.
{document1}












Click it and Unblock the Notifications