டுவிட்டரை அதிகமாய் யூஸ் செய்வது “ஜர்னலிஸ்ட்ஸ்”தானாம் – நிறுவனர் ஜேக் டோர்சே மகிழ்ச்சி
வாஷிங்டன்: பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை அதிகம் பயன்படுத்துவது பத்திரிகையாளர்கள்தான் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கு டுவிட்டர் நிறுவனர் "ஜேக் டோர்சே" பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் மற்ற துறைகளை காட்டிலும் பத்திரிகையாளர்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான் என்றும் தெரிய வந்துள்ளது.

டிரிக்கர் டிராப் நிறுவனத்தின் அதிகாரி ஹேஜ் இதை பற்றி கூறுகையில் "செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் தங்கள் செய்திகளை பகிரவும், பிற செய்திகளை தெரிந்து கொள்ளவும் அதிக அளவில் டுவிட்டர் பயன்படுத்துகிறார்கள். மேலும் அதிக அளவில் பிற பயனர்களை பின்பற்றுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
டுவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சே டுவிட்டரின் ஒன்பதாம் ஆண்டு பிறந்த நாளன்று தனது டுவிட்டர் பக்கத்தில், "தமது நிறுவனம் பிரபலமாவதற்கு பல தரபினரும் உதவினர்.
ஆனால் ஒரு துறையினருக்கு இன்று நான் நன்றி சொல்ல கடைமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் தான் பத்திரிகையாளர்கள்" என தெரிவித்திருந்தார்.
மேலும் பத்திரிகையாளர்கள் செய்திகளை பெறுவதற்காகவும், மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும் டுவிட்டரை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். ஜேக் டோர்சேயின் இந்த பதிவுக்கு உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ரீடுவீட் செய்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications