Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மச்சக்காரர்".. ஒரே வீட்டில் 3 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் "அந்த" சமாச்சாரம்தான்.. ஓ காட்

3 மனைவிகளுக்கு 60 குழந்தைகள் பிறந்துள்ள செய்தி ஷேர் ஆகி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத் ஒரே வீட்டில் 3 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கில்ஜி என்பவரை பற்றிதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.. இதைவிட இவர் ஒரு முக்கிய சாதனையையும் செய்துள்ளதால், அதுகுறித்த செய்தியும் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது..

உலகின் மக்கள் தொகை பிரச்சனை, பெரும் பிரச்சனையாகி கொண்டிருக்கிறது.. அதனால்தான் குடும்ப கட்டுப்பாடு முறையை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக கடைபிடித்து வருகின்றன.

சில நாடுகளில் குடும்ப கட்டுப்பாட்டை செய்து கொண்டால், பிரத்யேகமாக சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.. ஆனால், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் அனைவரையுமே திகைக்க வைத்துவிட்டார்.

கர்ப்பம்

கர்ப்பம்

பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. இவரது பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி... கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.. குழந்தை பிறந்தது விஷயமல்ல.. ஆனால் அது அவருக்கு 60வது குழந்தை என்பதுதான் ஸ்பெஷல் தகவலே.. கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள் இருக்கிறார்கள்.. இவர்களில் ஏதாவது ஒரு மனைவி, கர்ப்பம் ஆகி கொண்டே இருப்பாராம்.. மனைவிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி, குழந்தைகளும் ஒவ்வொன்றாக பிறந்து கொண்டே இருக்கும்.. இப்படி குழந்தை பெறுவதையே இந்த குடும்பம் முழு நேர தொழிலாக வைத்திருக்கிறார்கள் என்பது ஹைலைட்டான சமாச்சாரம்.

 ஹைலைட்ஸ்

ஹைலைட்ஸ்

இத்தனைக்கும் கில்ஜி ஒரு டாக்டராம்.. 50 வயதாகிறது.. ஆனால் 60 குழந்தைகள் எப்படி? என்பதுதான் ஆச்சரியமாக எல்லாருமே கேட்கிறார்கள்.. 3 மனைவிகளும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள்.. எல்லாருமே ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். 60வது குழந்தை பிறந்த பூரிப்பில் இருக்கிறார் கில்ஜி.. ஆனால், அப்போதுகூட அவருக்கு ஆசை அடங்கவில்லை.. இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள போகிறாராம்.. அதுமட்டுமல்ல, 4 ஆவதாகவும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள போகிறாராம்.. அந்த பெண் மூலம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள பிளான்கள் வைத்திருப்பதாக சொல்கிறார்.

 3 மனைவிகள்

3 மனைவிகள்

அதாவது தன்னுடைய குடும்பத்தை இன்னும் விரிவாக்கும் திட்டத்தில் முனைப்பாக இறங்கி உள்ளால் கில்ஜி.. அந்த பெண்ணையும் இவர்களுடனே சேர்த்து ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த போகிறாராம்.. ஆனால், நாட்டில் பண வீக்கம் கொஞ்சம் அதிகமாகிவிட்டதுதான், கில்ஜிக்கு லேசான பொருளாதார பாதிப்பை தந்துள்ளதாக தெரிகிறது.. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்ததால், அதுவும் இந்த 3 வருஷமாகத்தான் சற்று சிரமமாக இருக்கிறதாம். பெரும்பாலும், மனைவிகள், குழந்தைகளுக்கே செலவு செய்ய வேண்டி உள்ளதாம்..

 ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்

இன்னொரு ஆசையையும் கில்ஜிக்கு இருக்கிறது.. இவருக்கு பாகிஸ்தான் அரசு, ஒரு பஸ்ஸை தந்தால், அந்த பஸ்ஸில் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு, பாகிஸ்தான் முழுவதும் சுற்றி வரணும் என்று விரும்புகிறார்.. இந்த ஆசை ஒருபக்கம் இருந்தாலும், 60 குழந்தை பிறந்தும்கூட, குடும்பத்தை விஸ்தரிப்பதற்காக, தனக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை பார்க்கும்படி தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறாராம் கில்ஜி..

ஞாபகம் இருக்கா

ஞாபகம் இருக்கா

தன்னுடைய குழந்தைகள் எல்லாருக்குமே கல்வி வழங்கி வருகிறார் கில்ஜி.. இருந்தாலும், யாரிடமும் படிப்பு செலவுக்கு மட்டும் உதவி கேட்டது கிடையாதாம்.. ஆனால் தனது குழந்தைகள் "குடிமக்கள்" என்ற உரிமையை அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைக்கிறார். அதே ஒரு கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார் கில்ஜி.. தன்னுடைய 60வது குழந்தைக்கு குஷால் கான் என்றும் பெயரிட்டுள்ளார்.. குஷால் கானின் அம்மாவை, பிரசவத்துக்கு முன்பேயே உம்ராவுக்கு அழைத்து சென்றாராம்.. அதனால்தான், அவரை "ஹாஜி குஷால் கான்" என்று ஆசையாக கூப்பிடுகிறாராம்.. 60 குழந்தைகளின் பேர்கள் எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டால், "ஏன், இல்லை? கரெக்ட்டா ஞாபகம் இருக்கிறது" என்கிறார்.

 காதில் புகை

காதில் புகை

இந்த 60 பேரில், சில மகன்கள், மகள்களுக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாம்.. அவர்கள் எல்லாம் படித்து கொண்டிருக்கிறார்களாம்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. ஆனால், அதற்குள் தனக்கு வயசாகிவிடுவதால், உடனே 4வது கல்யாணத்துக்கு பெண் தேடி சொல்லி வருகிறார்.. அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், 4வது திருமணத்துக்கு கில்ஜி ரெடியானாலும், மற்ற 3 மனைவிகளும் இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.. அதுவும் பெண் குழந்தைகள்தான் பெற்று கொள்ள வேண்டுமாம்.. இதையெல்லாம் கேள்விப்பட்டுதான், மக்கள் அப்படியே அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்.. ஒரு கல்யாணம்கூட ஆகாமல் இருக்கும் 80ஸ் கிட்ஸ்களுக்கு காதில் புகை வந்து கொண்டிருக்கிறது.. ஆக மொத்தம், மக்கள் தொகை பிரச்சனை எல்லாம் நமக்குத்தான் போல..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+