சிறுவர்களுடன் செக்ஸ்: வாடிகனின் முன்னாள் தூதர் அதிரடியாக கைது!!

Subscribe to Oneindia Tamil

வாட்டிகன்: சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டின் கீழ் டொமினிக்கன் குடியரசுக்காக வாட்டிகனின் முன்னாள் தூதர் ஜோஜெப் வெசோலோவ்ஸ்கி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிறித்துவ மதபோதகர்கள் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் சம்பவம் அவ்வப்போது வெளிப்படும். இது தொடர்பாக போப்புகள் மன்னிப்புக் கோருவதும் வழக்கமாகிவிட்டது.

தற்போது வாடிகனில் மிக உயர்ந்த பதவியான தூதராக இருந்த ஆர்ச்பிசப் ஜோஜெப் வெசோலோவ்ஸ்கி இத்தகைய குற்றச்சாட்டின் கீழ் சிக்கியுள்ளார். டொமினிக்கன் குடியரசுக்கான வாடிகன் தூதராக இருந்த போது சிறுவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

Jozef Wesolowski, Former Dominican Republic Archbishop Accused Of Sex Abuses, Put Under House Arrest

கடந்த ஆண்டு டொமினிக் ஊடகங்கள் இந்த குற்றச்சாட்டை கிளப்பியபோது அவர் டொமினிக்கன் தூதர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ரோமுக்கு வரவழைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் ஜோஜெப் வெசோலோவ்ஸ்கி தற்போது கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வாடிகனில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+