Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீன்களுக்காக ஆடை அவிழ்த்த ஜேம்ஸ்பாண்ட், ஹாரிபாட்டர் பட நடிகைகள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கடல் உயிரினங்களை காக்க வேண்டும், கடல் வளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் உளவுத்துறை தலைமை அதிகாரியாக நடித்து வரும் 80 வயதான ஜூடி டென்ச் உள்ளிட்ட 5 நடிகைகள் மற்றும் ஒரு பெண் எழுத்தாளர் நிர்வாண போஸ் கொடுத்து ஹாலிவுட்டை கலங்கடித்துள்ளனர்.

ஜூன் 8ம் தேதி உலக கடல்பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடலை மாசுபடுத்த கூடாது, கடல்வாழ் உயிரினங்களை அழிய விடக்கூடாது என்ற கோஷத்தை முன்வைத்து ஹாலிவுட் பிரபல நடிகைகள் நிர்வாண போஸ் கொடுக்க முடிவு செய்தனர்.

மீன், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை வைத்து தங்களின் உடலில் மறைக்க வேண்டிய பாகங்களை மறைத்து, தங்கள் மானத்தை காப்பாற்றிய (!) கடல் உயிரினங்கள் என்று பிரச்சாரத்தில் குதித்துள்ளனர் இந்த அம்மணிகள்.

பாண்ட்.. ஜேம்ஸ்பாண்ட்

பாண்ட்.. ஜேம்ஸ்பாண்ட்

80 வயதான ஜூடி டென்ச், மேலே ஆடை எதுவுமின்றி, நண்டுகளை வைத்து மேல் அழகுகளை மறைத்தபடி காட்சியளிக்கிறார். வாயில் புன்னகையோடு. அவர் கூறுகையில், நானும் எனது சகோதரனும், நடக்க படிக்கும் முன்பே கடலில்தான் நீச்சல் பழகினோம். கடல் வளம் காக்கப்பட வேண்டும் என்றார். இவர்தான் ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் படங்களில் உளவுத்துறை பாஸ்-ஆக வரும் லேடியாகும்.

ஹாரிபாட்டர்

ஹாரிபாட்டர்

ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில், பீடுனியா டர்ஸ்லே கேரக்டரில் நடித்து வவரும் 56 வயதான பியோனா ஷாவும், இந்த நிர்வாண கோஷ்டியில் ஒருவர். அவர் சேரில் அமர்ந்து கொண்டு, பெரிய செந்நிற மீனை தனது தொடை முதல், முகம்வரை மறைத்தபடி பக்கவாட்டுகளை அப்பட்டமாக காட்சியளித்தபடி போஸ் கொடுக்கிறார்.

75 வயது நடிகை

75 வயது நடிகை

மற்றொரு பிரபல ஸ்டாரான 75 வயது, ஜூலி கிறிஸ்டி, பெட்டில் நிர்வாணமாக மல்லாக்க படுத்துள்ளார். அவரது கீழழகு முதல் மேலழகு வரையில் மீன்கள், கடல் சார் பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. நீங்கபாட்டுக்கு இப்படி படுத்துருக்கீங்களே, ஏதாவது ஒரு மீன் உயிரோடு இருந்து நெளிந்திருந்தால் என்ன ஆவது மேடம்..? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழாமல் இருக்காது, இவரது போஸை பார்த்தால்.

எழுத்தாளரும்

எழுத்தாளரும்

56 வயது பெண் எழுத்தாளர் கேத்தை லெட்டியும், நிர்வாண போஸ் கொடுத்ததில் ஒருவர். இவர் குப்புற படுத்திருக்க, பெரிய டாக்-பிஷ் ஒன்று அவர் மீது படர்ந்து, பின்னழகை சிறு அளவுக்கு மறைத்துள்ளது. அவரது முன்னால் மற்றொரு மீன் பார்ப்பதை போல போஸ் கொடுத்து படுத்துள்ளார்.

இளம் வயதில் ஆர்வம்

இளம் வயதில் ஆர்வம்

இதில் யூத் பொண்ணு என்றால், அது தம்லா கரி. 26 வயது. வளர்ந்து வரும் ஸ்டாரான இவர், தனது மேலழகை முழங்கையால் மறைத்தபடி, மீன்கள் இரண்டை, காதணி போல காண்பிக்கிறார். மீன்களை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று இவர் தெரிவிக்க முயன்றாலும், ரசிகர்கள் மீன்களையா பார்க்கப்போகிறார்கள்.

இது ரொம்ப மோசம்

இது ரொம்ப மோசம்

இதேபோல, நடிகை கார்டர் கொடுத்த போஸ் ஆக பயங்கரம். நிர்வாணமாக அமர்ந்துள்ள நிலையில், பெரிய மீனை தனது தொடை முதல் முகம் வரை வைத்து அதை ஆசையாக உற்று பார்ப்பதை போல போஸ் கொடுத்துள்ளார். மேலும், மீனை கீழே போட்டு அதன்பின்னால் தனது அழகுகளை மறைத்தபடியும் போஸ் கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+