அமெரிக்க சுதந்திர தினத்தன்று ஜூபிடரின் "எல்லை"க்குள் பிரவேசித்த ஜூனோ
நியூயார்க்: அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் நாசாவின் ஜூனோ விண்கலமானது, ஜூபிடரின் சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்து வரலாறு படைத்தது. மனிதன் அனுப்பிய விண்கலம் ஒன்று ஜூபிடரின் எல்லைக்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்.
ஜூபிடரை ஆராய நாசா அனுப்பிய விண்கலம்தான் ஜூனோ. வெற்றிகரமாக இது தற்போது ஜூபிடரின் சுற்றுப் பாதையில் நுழைந்துள்ளது.
கடந்த ஐந்து வருடமாக ஜூபிடரை நோக்கிப் பயணித்து வருகிறது ஜூனோ. தற்போது அதன் இறுதிக் கட்டத்தில் முதலாவதாக ஜூபிடரின் சுற்றுப் பாதையில் அது வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

ஆய்வு...
அடுத்து ஜூபிடர் கிரகத்தை நோக்கி அது நகரவுள்ளது. ஜூபிடரின் அழகிய வளையங்களை அது ஆராயவுள்ளது. மேலும் ஜூபிடர் கிரகத்தின் தன்மை குறித்தும் ஆராயவுள்ளது.

வாயுக்கள், பாறைகள்...
முற்றிலும் வாயுக்களால் நிரம்பிய கிரகம் ஜூபிடர். அதேசமயம், அதன் மையப் பகுதியானது பாறைகளால் ஆனதாக கருதப்படுகிறது.

49 நிமிடங்கள்...
ஜூபிடர் அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர 49 நிமிடங்களாகும் என்பதால் ஜூனோவின் பணிகளை உடனுக்குடன் அறிய முடியாது. தற்போது ஜூபிடர் கிரகத்திலிருந்து 2609 மைல்கள் தொலைவில் ஜூனோ உள்ளது.

காந்த தகடுகள்...
ஜூனோ விண்கலத்தில் வலுவான காந்த தகடுகள் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் அது ஜூபிடரை நெருங்க வேண்டியுள்ளது. எனவே அதற்கேற்றவாறு அது சுற்றி வரும், கூடவே ஆய்வுகளையும் மேற்கொண்டபடி.

37 முறை...
ஜூனோ ஜூபிடரின் சுற்றுப் பாதையில் கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கும் மேலாக சுற்றி வரும். மொத்தம் அது 37 முறை சுற்றி வரத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் ஜூனோ, ஜூபிடர் கிரகத்தை எடுத்த புகைப்படங்கள் பூமிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications