"காற்றடைத்த பை"யை மேலும் நெருங்கியது நாசாவின் "ஜூனோ"
வாஷிங்டன்: ஜூபிடர் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட நாசாவின் ஜூனோ விண்கலம் திட்டமிட்டபடி சென்று கொண்டுள்ளது. ஜூபிடரை அது மேலும் நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் அது ஜூபிடரின் சுற்று வட்டப் பாதைக்கு போய் விடும்.
காயமே இது பொய்யடா காற்றடைத்தா பையடா என்று பாட்டு உண்டு. அதற்கேற்ப, ஜூபிடரும் ஒரு மாபெரும் வாயுக்களால் நிரம்பிய கிரகமாகும். இந்த கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காகவே ஜூனோ விசேஷமாக வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜூனோ விண்கலம் செலுத்தப்பட்டது. ஜூபிடரின் தோற்றம், அது எப்படி உருவானது, அதில் என்ன இருக்கிறது, அதன் சுற்றுச்சூழல் என்ன என்பதை அறிவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது ஜூபிடரிலிருந்து ஜூனோ விண்கலமானது, 26 நாட்கள் 1.78 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 4ம் தேதி ஜூனோ விண்கலமானது, தனது என்ஜினை முதல் முறையாக இயக்கியது. கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் இந்த என்ஜின் இயக்கப்பட்டது. இதையடுத்து ஜூனோ விண்கலமானது, ஜூபிடர் விண்கலத்தின் துருவ சுற்றுப் பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து சான் அன்டோனியாவில் உள்ள தென் மேற்கு ஆய்வுக் கழகழகத்தின் முதன்மை ஆய்வாளர் ஸ்காட் போல்டன் கூறுகையில், ‘தற்போது தூரம் குறைய ஆரம்பித்து விட்டது. தற்போது விண்கலமானது விநாடிக்கு நான்கு மைல்கள் என்ற வேகத்தில் போய்க் கொண்டுள்ளது.
ஜூபிடரை, ஜூனோ நெருங்கும்போது விநாடிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் அது செல்லும். சுற்றுப் பாதையில் ஜூனோ நுழையும்போது அதன் வேகத்தைக் குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.
இந்த ஜூனோ விண்கலமானது ஜூபிடர் கிரகத்தின் காந்தப் புலம் குறித்தும் முக்கியமாக ஆராய உள்ளது. மேலும் அங்கு நீர், அம்மோனியா போன்றவற்றின் இருப்பும், ஜூபிடரின் அச்சுப் பகுதியும் ஆராயப்படவுள்ளது. அதை விட முக்கியமாக ஜூபிடரை சுற்றியுள்ள வளையங்களும் ஆராய்ச்சிக்குட்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications