நேபாளத்தில் பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
சென்னை: இன்று உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சீனாவில்தான் அதிக அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இருப்பினும் நேபாளத்தில் பூமிக்குக் கீழே வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில்தான் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் அதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலகின் பல பகுதிகளில் இன்று பூமி அதிர்ந்தது. இதில் அதிக அளவிலான அதிர்வை கண்டது சீனாதான்.

சீனாவின் ஷாம் நகரை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பமானது பூமிக்குக் கீழே 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பிராந்தியத்தில் சேதம் அதிகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
அதேசமயம், நேபாளத்தில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில்தான் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அதன் அளவு 5.6 ரிக்டராக பதிவாகியுள்ளது. எனவே நேபாளத்திலும் பாதிப்பு அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் செளம்லாகி என்ற இடத்தை மையமாக வைத்து 5.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் பூமிக்குக் கீழே 154 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதால் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
அதேசமயம், அதே இந்தோனேசியாவின் சின்டங்கசரி பகுதியில் பூமிக்குக் கீழே 29 கிலோமீட்டர் ஆழத்தில் 5.1 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதுதவிர ஆப்கானிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவிலும், பிஜி தீவில் 4.8 ரிக்டரிலும், ஹவாயில் தீவில் 3.1 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications