கொந்தளித்த இந்தியா.. உடனே விளக்கம் தந்த ஜஸ்டின் ட்ரூடோ! என்ன சொன்னார்! கனடாவில் என்ன தான் நடக்கிறது
ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நல்லுறவே நீண்ட காலமாக இருந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் அங்கே காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
இந்தியா கனடா விவகாரம்: இந்தச் சம்பவம் தான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமும் இது குறித்துக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்குக் கண்டனமும் தெரிவித்தது.
இதற்கிடையே இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இந்தியாவைத் தூண்டிவிடக் கனடா முயலவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். இதன் காரணமாகவே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.. இந்தியாவைத் தூண்டிவிடுவது அல்லது பிரச்சினையை அதிகரிப்பது எங்கள் எண்ணம் இல்லை.. அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அந்நாட்டுச் சட்டசபையில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளின் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்காவும் கூறியது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்தியா பதிலடி: கனடாவின் புகார்களை இந்தியா அடியோடு மறுத்தது. கனடாவில் நடந்த வன்முறைச் செயலில் இந்திய அரசின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று தெரிவித்துள்ளது. மேலும், கனடா பிரதமரின் இந்த புகார்களை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் கனடாவுக்கான இந்தியத் தூதர் ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் ஒருவரை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், கனடாவில் இதுபோல எந்தவொரு தடைகளும் இல்லை. இதன் காரணமாகவே அங்குள்ள ஒரு தரப்பினர் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த விவகாரம் அங்கே பெரிய விஷயமாக மாறி வருகிறது. வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்!












Click it and Unblock the Notifications