For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழைகளுக்கு உதவ குவைத்தில் நாளை நடக்கும் ஆடைகள் சேகரிப்பு முகாம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் ஆடைகள் சேகரிப்பு முகாம் நாளை குவைத்தில் நடைபெறுகிறது.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) ஆடைகள் சேகரிப்பு முகாமை நாளை நடத்துகிறது. இந்த முகாம் குவைத் கைத்தானில் உள்ள கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்கு முன்பு நடைபெறும்.

K-Tic's clothes collecting camp

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர்,

பெரியவர்/சிறியவர்/ ஆண்/ பெண் அணியக்கூடிய புதிய, பழைய(நல்ல நிலைமையில் உள்ள) துணிகள்/விரிப்புகள்/போர்வைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.

துணிகள், போர்வைகளை துவைத்து மடித்து பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொடுத்தல் நலம்.

இந்த முகாமில் குவைத் வாழ் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 9787 2482/ 9943 0786/ 9969 4208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
K-Tic has arranged for a clothes collecting camp in Kuwait on january 30th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X