4 இடங்களில் அடுத்தடுத்து அட்டாக்.. ஐஎஸ் அமைப்பின் சதிவேலை?.. வெளியான காபூல் குண்டுவெடிப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

காபூல்: காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து 4 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கு இருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி உள்ளனர். இந்த நிலையில்தான் சற்று நேரத்திற்கு முன்பு காபூல் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

முதலில் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் பரோன் ஹோட்டல் கேட் அருகே இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

 யார்

யார்

பரோன் ஹோட்டல் கேட் அருகேதான் வெளிநாட்டு மக்கள் பலர் கூடி இருந்தனர். முக்கியமாக அமெரிக்கர்கள் பலர் இங்கே விமானம் ஏறுவதற்காக காத்து இருந்தனர். அமெரிக்க படைகளும் இங்கு அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் சரியாக அந்த குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

மனித வெடிகுண்டு

மனித வெடிகுண்டு

இதையடுத்து சில மணி நேரம் கழித்து மேலும் 2 குண்டுகள் விமான நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வெடித்தது. மனித வெடிகுண்டு தாக்குதல் இது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ் பிரிவின் கிளை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் ( Islamic State-Khorasan IS-K) என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாலிபான்களுக்கு இந்த தாக்குதல் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

Recommended Video

    இனி Lithium-க்கு Afghan தான்.. சரியான நேரத்துக்கு காத்திருக்கும் China
    தலைவலி

    தலைவலி

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வென்றதும் அங்கு ஐஎஸ் அமைப்பும் ஐஎஸ் அமைப்பின் பல கிளை தீவிரவாத குழுக்களும் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகின. தாலிபான்களின் வெற்றியால் இங்கு தீவிரவாத அமைப்புகள் முகாம் போட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது அதை உறுதி செய்யும் வகையில் தற்கொலை தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இரண்டாவது தாக்குதல் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆப்கான் செய்தியாளர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பார்க்கவே பதற வைக்கும் அளவிற்கு இந்த குண்டுவெடிப்பு வீடியோ உள்ளது. இதில் 60 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வருகிறது. 80க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+