எங்களை காப்பாற்றுங்கள்.. காபூல் ஹோட்டலில் இருந்து வந்த போன்.. தீவிரவாத தாக்குதலில் நடந்த சோகம்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த 11 மணிநேரமாக தீவிரவாதிகள் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர்.
தற்போது தாக்குதலை ராணுவத்தினர் கஷ்டப்பட்டு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த தாக்குதல் நடந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு உள்ளே இருந்து ஒருவர் கால் செய்து இருக்கிறார். அவர் உதவி கேட்கும் போன் கால் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

நடந்தது என்ன
அந்த ஹோட்டலுக்கு நான்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஐந்து மாடி கட்டிடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இருந்த ஊழியர்கள், வெளிநாட்டு பயணிகளை அடைந்து வைத்துள்ளனர்.

போன் கால்
இந்த தாக்குதல் தொடங்கிய போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு போன் கால் ஒன்று வந்து இருக்கிறது. அதில் ''நான் இந்த ஹோட்டலுக்குள் மாட்டி இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.'' அவருடைய பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை.

என்ன விவரம்
அவர் போன் காலில் நிறைய விவரங்கள் சொல்லியுள்ளார். அதில் ''இங்கு நான்கு தீவிவாதிகள் இருக்கிறார்கள். நான் ஒளிந்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் நிறைய பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறார்கள். பயங்கர ஆயுதம் வைத்துள்ளார்கள்'' என்று கூறியுள்ளார்.

அணைத்து வைக்கப்பட்டது
இந்த தகவல் உடனடியாக ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கால் செய்யும் போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது ராணுவத்திற்கு தெரியாமல் இருக்கிறது. இவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இன்னொரு போன்கால்
இந்த தாக்குதலின் போது இன்னொரு போன்காலும் வந்துள்ளது. அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பணியாளர் தன் நண்பருக்கு கால் செய்து இருக்கிறார். அதில் ''தீவிவாதிகள் எல்லோரையும் சுடுகிறார்கள். பலரை தூக்கி சென்று அடைந்து வைத்து இருக்கிறார்கள். விருந்தினர் மாளிகையில் தற்போது இருக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications