ரஜினியின் ஆன்மீக அரசியல் காவி அரசியலாக இருக்காது என நம்புகிறேன்... கமல்
எனது நிறம் காவி இல்லை என்பதை போல் ரஜினியின் நிறமும் காவியாக இருக்கக் கூடாது என்று கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
வாஷிங்டன்: ரஜினியின் ஆன்மீக அரசியல் காவி அரசியலாக இருக்கக் கூடாது என்று நம்புகிறேன் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேசினார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சி அரங்கத்தில் கமல்ஹாசன் வேட்டி, சட்டையில் வரும்போது "தலைவர் வாழ்க" என மாணவர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது அவர் பேசுகையில், நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. அவருடன் கூட்டணி என்பது அவரது கொள்கைகளை வைத்தே முடிவு செய்ய முடியும்.

ரஜினியின் நிறம்
எனது நிறம் காவி நிறமாக இருக்காது. அதுபோல் ரஜினியின் ஆன்மீக அரசியலும் காவி அரசியலாக இருக்கக் கூடாது என்பதை நம்புகிறேன்.

தேர்வு செய்வது என் உரிமை
தமிழன் என்பது விலாசமே தவிர தகுதி அல்ல. எனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை. அதனை பிறர் தீர்மானிக்கக்கூடாது.

ஒரு கிராமத்தை தத்தெடுப்பு
2018ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான், கிராமங்களிலிருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போகிறோம்.

முன்னோடி கிராமம்
தத்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர். தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கிய கமல்ஹாசன் நாளை நமதே என்று உரையை முடித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications