கருணாநிதி நூற்றாண்டு விழா! குவைத் சென்ற கனிமொழி! ஏர்போர்ட்டுக்கு திரண்டு வந்து வரவேற்ற திமுகவினர்!
குவைத்: கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குவைத் சென்ற திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு, அங்கு திமுக அயலக அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருப்பது தமிழ்நாட்டிலா அல்லது குவைத்திலா என கனிமொழியே குழம்பிப் போகும் அளவுக்கு திமுக கரைவேட்டியுடன் கட்சியினர் குவைத் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர். தன்னை வரவேற்க வந்த கட்சிக்காரர்களிடம் நின்று முகம் கொடுத்துப் பேசி அவர்கள் வழங்கிய பூங்கொத்துக்களை பெற்றுக்கொண்ட பிறகே கார் ஏறினார் கனிமொழி.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியது. அதேபோல் திமுகவில் உள்ள சார்பு அணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில் திமுக அயலக அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா குவைத்தில் இன்று நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி.ஆகியோர் கலந்துகொண்டனர். குடும்ப சூழல் காரணமாகவும், படிப்பிற்கேற்ற பணி காரணமாகவும் கடல் கடந்து சென்று வேலை பார்க்கும் இடத்தில் கூட கட்சியை விட்டுக்கொடுக்காமல் கருணாநிதிக்கு விழா எடுத்து கவனம் ஈர்த்துள்ளனர் குவைத் திமுகவினர்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கிட திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஆ. இராசா, எம்.பி., கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, எம்.பி., தயாநிதி மாறன், எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆகியோர் உள்ளனர். இதனால் தான் கனிமொழியை குவைத்திற்கு அழைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர் குவைத் திமுகவினர்.
தமிழ்நாட்டில் இருப்பதை போலவே குவைத் திமுகவிலும் பொருளாளர், செயலாளர் என அமைப்பு ரீதியாக பல பதவிகள் நிறுவப்பட்டு ஒவ்வொன்றிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications