பேஸ்புக் மார்க்கிடம் கடனை அடைக்க "கைமாத்து" கேட்கும் கிம்மின் வீட்டுக்காரர் வெஸ்ட்!
கலிபோர்னியா: தலைக்கு மேல் கடன் குவிந்திருக்கிறது. தயவு செய்து காசு கொடுத்து உதவுங்கள்.. டிவிட்டரில் இப்படிக் கோரிக்கை விடுத்து பல்வேறு பிரபலங்களுக்கும் டிவீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கிம் கர்தஷியானின் கணவரான கென்யே வெஸ்ட்.
பேஸ்புக் "ஓனர்" மார்க் ஷுக்கர்பர்க் தொடங்கி, லேரி பேஜ் வரை ஒருவரையும் விடவில்லை அவர். அது மட்டுமல்லாமல் என் மீது அன்பு கொண்ட அனைவரும் இவர்களுக்கு மெயில் போட்டோ அல்லது பேஸ்புக் மூலமாகவோ கோரிக்கை விடுத்து எனக்கு உதவி செய்யுமாறு பரிந்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் கென்யே வெஸ்ட்.
ஆப்பிரிக்காவில் பள்ளி தொடங்க ஆர்வம் காட்டும் ஷுக்கர்பர்க்கும், லேரி பேஜும், என்னைப் போன்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். எனது பாடல்களை கேட்டு ரசிக்கும் இவர்கள், எனக்கு உதவி செய்யவும் கடமைப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் வெஸ்ட்.

கிம் வீட்டுக்காரர் வெஸ்ட்
கென்யே வெஸ்ட்டும், கிம்மும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கிம் ஒரு ராப் கலைஞர் ஆவார். இந்த நிலையில் தனக்கு 53 மில்லியன் டாலர் அளவுக்கு கடன் இருப்பதாக கூறியுள்ளார் கிம்.

பேஸ்புக் நிறுவனரிடம் கடன் கேட்டார்
இதுதொடர்பாக அவர் டிவீட்டுகளை சரமாரியாகப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் பல்வேறு பிரபலங்களிடமும் கடன் கேட்டுள்ளார். குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க்கிடம் பணம் கேட்டுள்ளார்.
|
1 பில்லியன் டாலர் கொடுங்கள்
இதுதொடர்பாக வெஸ்ட் போட்ட டிவீட்டில், மார்க் ஷுக்கர்பர்க் எனது பாடல்களை ரசிக்கிறார், நடனத்தை ரசிக்கிறார். எனவே அவர் எனக்காக 1 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இந்த மாபெரும் கலைஞனுக்காக இதை அவர் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹிப்ஹாப்பை ரசித்தால் மட்டும் போதுமா
அத்தோடு இன்னொரு டிவீட்டில், மார்க் உங்களது பிறந்த நாள் இன்று என்று தெரியும். என்னை நாளைக்கு அழைக்க முடியுமா.. நீங்கள் ஹிப்ஹாப்பை விரும்புகிறீர்கள். எனது கலையை ரசிக்கிறீர்கள். நான் உங்களது விருப்ப கலைஞனாகவும் இருக்கிறேன். ஆனால் என்னை வெறுமனே பார்த்து மட்டும் ரசிக்கிறீர்கள்.

ஆதரவு தாருங்கள்
எனது ஆல்பம் உங்களது வீட்டில் ஒலித்துக் கொண்டுள்ளது. உலகமே, எனக்காக, மார்க்கிடம், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்டைம் என உங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் எனக்கு மார்க் உதவ வேண்டும் என்று பரிந்துரையுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் வெஸ்ட்.
|
லேரி பேஜுக்கும்
அதேபோல லேரி பேஜுக்கும் அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ஹேய், லேரி பேஜ், நீங்களும் எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வெஸ்ட்.

இசையை மட்டும் ரசிச்சா எப்படி
மேலும் அவர் கூறுகையில், எல்லோரும் தங்களது வீடுகளில் எனது இசையை ரசிக்கிறார்கள். ஆனால் உண்மையான கலைஞர்களுக்கு உதவி செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் பள்ளி தொடங்கினால் போதுமா
ஆப்பிரிக்காவில் பள்ளி தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை. நான் ஒரு பிரபலம். எனக்கு உதவ வேண்டாமா. எனக்கு உதவ உங்களது விரல்களைக் கூட அசைக்காமல் உள்ளீர்கள் என்றும் புலம்பியுள்ளார் வெஸ்ட்.
வெஸ்ட்டுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை வந்துச்சு.. கிம் ஒன்றும் பேசாமல் உம்முன்னு இருக்காரே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications