வரலாறு படைத்த திருநங்கை.. ஆஸ்கர் விருதுக்கு சிறந்த நடிகை பிரிவில் நாமினேட் ஆன கார்லா சோபியா காஸ்கான்
லாஸ் ஏஞ்சல்ஸ்: 97 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான பிரிவில் ஸ்பானிஷ் நடிகையான கார்லா சோஃபியா காஸ்கான் நாமினேட் ஆகியுள்ளார். ஆஸ்கர் விருதுகளுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் திருநங்கை ஒருவர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
ஆஸ்கர் விருதுக்கு ஸ்பானிஷ் மொழித் திரைப்படமான 'Emilia perez' 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங்கிலம் அல்லாத பிற மொழித் திரைப்படங்களில் அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

எமிலியா பெரஸ் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் விருதுக்காக இப்படத்தின் இயக்குநர் jacques audiard, சிறந்த நடிகை sofia gascon, சிறந்த துணை நடிகை Zoe saldana, சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மியூசிக்கல் டிராமா ஜானரில் உருவாகியுள்ள எமிலியா பெரஸ் ஸ்பானிஷ் திரைப்படம் திருநங்கைகள் குறித்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள எமிலியா பெரஸ் திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட 'ரோமா' என்ற படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
சிறந்த காமெடி மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது வென்றுள்ள எமிலியா பெரஸ் திரைப்படம், சிறந்த திரைபடத்திற்கான ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எமிலியா பெரஸ் படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள karla sofia gascon ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்கர் விருதுகளுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் திருநங்கை ஒருவர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. எமிலியா பெரஸ் படத்திற்கும் கார்லா சோஃபியா காஸ்காவின் கதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. தனது சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்கிற கனவுடன் இருந்த கார்லா சோஃபியா காஸ்கான், திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சிக்கு பட்டம் பெற்றார்.
பின்னர் லண்டன் சென்று குழந்தைகளுக்கான மொழி கற்றல் நிகழ்ச்சியில் பணியாற்றினார். ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர்களில் வேலை செய்து பின் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தனது பாலினத்தை மாற்றிக் கொண்டார். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அதிகம் பேசப்படக் கூடிய ஒருவரில் கார்லா சோஃபியா காஸ்கா இருந்து வருகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications