"தண்ணித் தொட்டிக்குள்" உக்காந்து பேசியதெல்லாம் வெளியாகியிருமோ.. பீதியில் கேட், வில்லியம்
லண்டன்: காதலர்களாக இருந்தபோது, இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் குறித்து தனது கணவர் வில்லியமுடன் பகிர்ந்து கொண்டவை ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் ராஜ குடும்பத்து மருமகளான கேட் மிடில்டனுக்கும், அவரது கணவர் இளவசர் வில்லியமுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்
வெளியில்தான் புன்னகை முகமாக இருவரும் வலம் வருகின்றனராம். ஆனால் உள்ளுக்குள் கவலையுடன்தான் இருக்கின்றரனராம். சமீபத்தில் நடந்த மகன் ஞானஸ்னான நிகழ்ச்சியின்போது கூட கேட் மிடில்டன் சுரத்தே இல்லாமல்தான் இருந்ததாக பலரும் கூறுகின்றனர்.
கேட்டின் இந்தக் கவலைக்குக் காரணம் உள்ளது. கேட் மிடில்டனுக்கும், இளவரசர் வில்லியமுக்கும் இடையே நடந்த பல தொலைபேசிப் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதுதான் கேட்டின் கவலைக்கு முக்கியக் காரணமாகும். அவர்களது பேச்சின்போது பல ராஜ ரகசியங்கள் குறித்தும் கேட்டிடம் வி்ல்லியம் கூறியதாக கூறப்படுகிறது.

ஹேக் செய்த நியூஸ் ஆப் வேர்ல்ட்
நியூஸ் ஆப் வேர்ல்ட் என்ற பத்திரிகைதான் ஒட்டு கேட்பு வேலையைச் செய்தது. இப்போது அந்தப் பத்திரிகை வருவதில்லை என்றாலும் கூட விதமான பயம் கேட் மனதை அப்பியுள்ளதாம்.

காதலர்களாக இருந்தபோது
செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக் கொண்டிருந்தனர் கேட்டும், வி்ல்லியமும். அவர்களது பேச்சின் மொத்தம் 697 உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாம்.

பயங்கர ரகளை வரும்
வில்லியமும், கேட்டும் பேசிக் கொண்டவை வெளியானால் மிகப் பெரிய பிரளயம் அரச குடும்பத்தில் ஏற்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மாமியார் பத்தி கிசுகிசு
இந்தப் பேச்சின்போது ராணி எலிசபெத் குறித்தும், ராஜ குடும்பத்துக் கடமைகள் குறித்தும் நிறையப் பேசியுள்ளாராம் கேட். எலிசபெத் குறித்து தனது மனதில் தோன்றியதை அப்படியே கூறியுள்ளாராம் கேட். எனவே கேட் பேசியது எலிசபெத்துக்குத் தெரிய வந்தால் அவர் அதிர்ச்சி அடைவார் என்கிறார்கள்.

கொழுந்தனார் குறித்தும் வம்புப் பேச்சு
அதேபோல வில்லியமின் தம்பி ஹாரி குறித்தும் நிறையப் பேசியுள்ளாராம். அதுவும் இப்போது கேட்டுக்குப் பெரும் தர்மசங்கடமாக உள்ளதாம்.

நம்ம அஜீத் திரிஷா மாதிரியே
ஒரு படத்தில் அஜீத்தும், திரிஷாவும் மொட்டை மாடியில், தண்ணீர் தொட்டிக்குள் உட்கார்ந்து குடும்ப உறுப்பினர்களைக் கலாய்த்துப் பேசியிருப்பார்களே அதே போலத்தான் என்கிறார்கள் வில்லியம், கேட் பேச்சு குறித்தும்.
அப்ப கண்டிப்பா சிக்கல் வரும்மா கேட்.. நோ டவுட்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications