ஞானலிங்கேச்சுரத்தில் கேதாரகௌரி நோன்பு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பாரீஸ்: சுவிஸ் நாட்டின் தலைநகரில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் கேதார கௌரி விரதம் இனிதே இறையருள் நிறைந்து, அன்னையர்களால் 11. 11. 2015, புதன்கிழமை சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமாக அடியார்கள் நோன்பில் கலந்து, தம் கரங்களால் அம்மை அப்பனை செந்தமிழால் வழிபட்டனர்.
திருமணம் முடிந்த தம்பதியர்கள் இவ்வுலகில் நீண்டு நெடிய நோய், வறுமை நீங்கி செல்வம் பெற்று நிறைந்து வாழவும், கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளை யாவரும் நிறைந்து பெறுவதற்கும் சிறந்த இன்நோன்பு நிறைவுத் திருநாளில் யாவரும் பங்கெடுத்து இறைவனின் திருவருளை பெற ஞானலிங்கேச்சுரத்து செந்தமிழ் அருட்சுனையர்கள் நல்லாசி வழங்கினர்.

கேதார கௌரி விரதம் ஏன்
முன்னொருகாலத்தில் பிருங்கு முனிவர் பெருமானை மட்டும் வழிபடுவதைக் கண்டு, சிவபெருமான் உடலில் ஒருபாகம் பெற, ஞானாம்பிகை 21 நாளும் ஞானலிங்கப்பெருமானை நோன்பு நோற்று, இமையத்தின் அடியில் கேதாரத்தில் எம்பெருமானின் உடலில் ஒருபாகம் பெற்று, மாதொருபாகன் என்று எல்லாரும்போற்;ற, ஞானலிங்கப்பெருமான் இடப்பாகத்தில் நிறைந்து இருந்து ஞானலிங்கேச்சுரத்தில் ஞானாம்பிகையாக அருள் புரிகின்றாள்.
சிறப்பான நோன்பு
இந்நாளில் அம்பிகை சிவனை நோக்கி 'எம்பெருமானே இந்நோன்பினை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று 'அங்கனமே ஆகுக' என்று அருள் புரிந்தார். நந்தியம்பெருமான் இந் நோன்பினை, தேவர்களுக்கும், அவர்கள் உச்சையினி மன்னனிற்கும் அகத்தால் அளித்து, இன்று உலகில் புறத்தால் நோற்கும் சிறப்பு சிவநோன்பாக கேதார கௌரி நோன்பு விளங்குகின்றது.
ஞானலிங்கேஸ்வரத்தில் நோன்பு
இப்பெரும் நோன்பு ஈழத்து அரசனாம், இணையில்லா சிவனடியான் இராவணன் மீது எழுந்து, சுவிஸ் நாட்டின் தலைநகரில் சிறப்பாக செந்தமிழ் வழிபாடு நாளும் இன்பச் செவிகள் நிறைந்து கேட்டு, அடியவர்கள் கேட்கும் வரம் அனைத்தும் அள்ளி அளிக்கும் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் இனிதே இறையருள் நிறைந்து, அன்னையர்களால் 11. 11. 2015, புதன்கிழமை சிறப்பு வழிபாடுகளுடன் நோன்பு நோற்கப்பட்டது.
இறையருள் பெற வழிபாடு
தம்பதியர்கள் இவ்வுலகில் நீண்டு நெடிய நோய், வறுமை நீங்கி செல்வம் பெற்று நிறைந்து வாழவும், கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும்இ சிவனருளை யாவரும் நிறைந்து பெறுவதற்கும் சிறந்த இன்நோன்பு நிறைவுத் திருநாளில் யாவரும் பங்கெடுத்து பெருமாட்டி திருவருளையும், பெருமான் பேரருளையும் பெற்றுய்ய ஞானலிங்கேச்சுரத்து செந்தமிழ் அருட்சுனையர்கள் நிறை நல்லாசி வழங்கி நின்றனர்.
கேதாரீஸ்வரம்
மாலை முதல் இரவு வரை நடந்த வழிபாட்டில் இளந்தமிழ்ச் செல்வங்களும், அன்னையர்களும் விருப்புடன் பங்கெடுத்து, அன்னையினைத் தம் தோள்களிற் தாங்கி திருநடை வந்தனர். ஞானலிங்கேச்சுரம் கேதாரீஸ்வரமாக இன்று விளங்கிற்று. சுவிஸ் வாட்டில் அருளமுதுதாக அனைவருக்கும் இட்லி, பல் சிறப்புப் சிற்றுண்டிகளுடன், அறுசுவை அன்னம் வழங்கி மகேச்சுர வழிபாட்டுடன் வழிபாடுகள் நிறைவுற்றன.












Click it and Unblock the Notifications