For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிபர் தேர்தலே நடக்காது.. அமைதியாக இருங்கள்.. டிரம்பிற்கு கிம் ஜோங் உன் பகிரங்க எச்சரிக்கை.. பகீர்!

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரியாவின் விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டால் அமெரிக்காவில் அதிபர் தேர்தலே நடக்காது, பெரிய பிரச்சனை வரும் என்று வடகொரியா தெரிவித்து இருக்கிறது.

Recommended Video

    America-வை பகிரங்கமாக எச்சரித்த Kim Jong Un

    அமெரிக்கா சீனா இடையே எப்படி உறவு சரியாக இல்லையோ அதேபோல் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலும் உறவு சரியாக இல்லை. இரண்டு நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டு நாடுகளும் சண்டையில் குதித்து இருக்கிறது.

    முக்கியமாக அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும் காரணத்தால், தென் கொரியாவுடன் வடகொரியா தனது உறவை துண்டித்து இருக்கிறது. தென் கொரியாவும், வடகொரியாவும் எப்போது வேண்டுமானாலும் போருக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு 5% மட்டுமே.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. கொதிக்கும் நெட்டிசன்பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு 5% மட்டுமே.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. கொதிக்கும் நெட்டிசன்

    மோசமான நிலை

    மோசமான நிலை

    முக்கியமாக தென் கொரியா அமெரிக்காவுடன் சேர்ந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடகொரியா மற்றும் தென் கொரியா உறவு மொத்தமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. முதற் கட்டமாக தென்கொரியாவுடன் போக்குவரத்து மற்றும் தொலைபேசி தொடர்பை வடகொரியா துண்டித்து உள்ளது.

    அமெரிக்கா கருத்து

    அமெரிக்கா கருத்து

    இந்த சண்டையில் தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. தென் கொரியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள். அதேபோல் சமயம் வடகொரியாவும் சீனாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகள். இதனால் வடகொரியாவை அழிக்கும் வகையில் தென் கொரியாவுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. இது வடகொரியாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இந்த நிலையில் வடகொரியாவின் விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டால் அமெரிக்காவில் அதிபர் தேர்தலே நடக்காது, பெரிய பிரச்சனை வரும் என்று வடகொரியா தெரிவித்து இருக்கிறது. அந்நாட்டு அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் நாட்டு விஷயத்தில் அமெரிக்கா தலையிட கூடாது. நீங்கள் எங்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்க கூடாது. நீங்கள் தவறு செய்கிறீர்கள்.

    மிக கடுமை

    மிக கடுமை

    எங்கள் பிரச்சனையில் தலையிடும் முன் உங்கள் நாட்டின் பிரச்னையை கவனியுங்கள். உங்கள் உள்நாட்டில் அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. நீங்கள் மோசமான சூழ்நிலையில் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எங்களிடம் மோதினால் உங்களின் அமைதிதான் கெடும். உங்கள் நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க வேண்டும் என்றால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

    நாக்கை சும்மா வையுங்கள்

    நாக்கை சும்மா வையுங்கள்

    உங்கள் நாக்கை வைத்துக் கொண்டு சும்மா இருங்கள். உங்களுக்கு பிரச்சனை வேண்டும் என்றால் எங்களிடம் மோதுங்கள் , இல்லையெனில் வடகொரியா குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருங்கள். இது உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் நாட்டு மக்களுக்கும் இதுதான் சரியான விஷயமாக இருக்கும் என்று பகிரங்கமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    English summary
    Keep quiet, If you want to run your presidential elections smoothly says Kim Jong Un to USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X