ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக கென்னடி மகள் கரோலின் நியமனம்
வாஷிங்டன்: ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் அதிபர் கென்னடியின் மகள் கரோலின் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 38-வது அதிபராக பதவி வகித்தவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் எப் கென்னடி. இவர் கடந்த 1961 முதல் 1963-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி தனது 46-வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டடார். இவரது மகளின் பெயர் கரோலின் கென்னடி.

இவரைத் தற்போது ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதராக அறிவித்துள்ளது அந்நாடு. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தனது துறை அதிகாரிகளிடம் கரோலின் கென்னடியை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது கரோலின் கென்னடி, தான் சிறுமியாக இருந்தபோது அவரை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்ததை பற்றி நினைவு கூர்ந்தார்.
அதன் பின்னர், தனக்கு அளிக்கப் பட்ட ஏற்பது குறித்து நிருபர்கள் மத்தியில் கரோலின் கூறியதாவது, ‘ஆசியாவில் எங்கள் நாட்டின் முக்கியமான கூட்டாளி ஜப்பான். ஒரு தூதராக ஜப்பானுடனான அமெரிக்காவின் நல்லுறவை மேலும் மேம்படுத்துவேன். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்கரீதியிலான உறவுகளும், வர்த்தக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேம்பட பாடுபடுவேன்' எனத் தெரிவித்தார்.
சீனா, தென் கொரியாவுடன் ஜப்பானுக்கு தீவுகள் உரிமை தொடர்பான பிரச்னை தொடர்ந்து வருகிறது. ஆனால், அது குறித்து கரோலின் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. காரணம் தென்கொரியா, அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடு என்பதே ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications