புதுசு கிடைத்ததும் பழசைக் கைவிடும் இக்காலத்தில்.. இவர் செய்தது ரொம்பச் சிறப்பு பாஸ், ரொம்ப சிறப்பு!

Subscribe to Oneindia Tamil

நைரோபி: கென்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தாம் காதலித்த 2 பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்றளவும் சொல்வது உண்டு. திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவுதான் கணவன் மனைவி உறவு.

kenya man marrying two womens in one wedding

ஒருவருக்கு ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்ற உறவே தாம்பத்திய உறவு. வாழ உப்பையும், கசப்பையும், இனிப்பாக்கவல்லது இவ்வுறவு. புது, புது உறவுகளையும், அனுபவங்களையும் நமக்கு உருவாக்க கூடியது.

இந்நிலையில், கென்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து மற்றவர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். கென்யாவின் கஜியாடோ மாகாணத்தை சேர்ந்த மாகோ என்ற 27 வயது இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய பரஸ்பரம் ஒப்பு கொண்டனர். அதன்படி உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ, அனைவரின் முன்னிலையில் அந்த இளைஞர் தமது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவரையும் எவ்வித குறையும் இன்றி மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள போவதாகவும் மணமகன் மாகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த பின்னர் இரண்டு மணப்பெண்களும் ஜாலியாக ஆடி பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கென்யாவில் பலதார மணம் என்பது சகஜமான விஷயம் தான் என்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+