2 ஆக உடையும் ஆப்ரிக்க கண்டம்? இந்தியாவுடன் மோதும் ஒரு பாதி? காஷ்மீர் போல மாறும் கேரளா, கர்நாடகா!
நைரோபி: ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா குளிர் பிரதேசங்களாக மாறும். காஷ்மீர் போல மாறும், உலகில் மிக மிக அரிதாக நடக்கும் சம்பவம் இது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் வேறு வேறு தோற்றத்தில் இருந்த நிலப்பரப்புகள் நிலநடுக்கம், சுனாமி, நில அடுக்கு நகர்வுகள், எரிமலை வெடிப்புகள் காரணமாக உருமாற்றம் அடைந்து தற்போது இருக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது.

இதன் காரணமாகவே வேறு வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி தற்போது இருக்கும் 7 கண்டங்கள் உருவாகின. நிலப்பரப்புகள் மோதியதால் மட்டுமே தற்போது இருக்கும் பல்வேறு மலைகளும் கூட தோன்றின.
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலம்..ராமேஸ்வரத்தின் பெருமையை இனி உலகம் பேசும்
ஆப்ரிக்க கண்டம்: அந்த வகையில் தற்போது இருக்கும் ஆப்ரிக்க கண்டம் பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது இரண்டாக கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலப்பரப்பு பிரியும் பகுதியில் நீர் புகுந்து அங்கே பெரிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாக பிரிகிறது: ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவதை ரிப்ட் என்று கூறுவார்கள். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவது. இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, இரண்டு பகுதிகளாக மாறிவிடும் . இதுவாக இரண்டு தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நகர்வு வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இப்படி தட்டுகள் நகரும் இடைப்பட்ட இடைவெளியில் பொதுவாக கடல் நீர் நுழைவது வழக்கம்.
எப்படி நகருகிறது: அப்படித்தான் கடல்கள் உருவாகும். தற்போது கிழக்கு ஆப்ரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது. அதன்படி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளன. எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும். இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கி விட்டனவாம். African Nubian, African Somali, Arabian ஆகிய அடுக்குகள் பிரிய தொடங்கி உள்ளன. இவை சாட்டிலைட்டில் மட்டுமின்றி கண்ணால் பார்க்கும் அளவிற்கு பிளவு தென்பட தொடங்கி உள்ளது.
கேரளா மாறும்: இதனால் ஆப்ரிக்க கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்களோடு மோதும். இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா குளிர் பிரதேசங்களாக மாறும். காஷ்மீர் போல மாறும். ஆனால் இவை எல்லாம் நடக்க சில லட்ச வருடங்கள் ஆகும்.
புதிய நாடுகள் உருவாகும்: தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது மொத்தமாக பிரிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும். பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம். ஆனாலும் அடுத்த 50000 வருடத்தில் இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்கும். ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் திடீர் மாற்றங்கள் இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications