என்ட லேப்டாப் பொசுங்கிப் போயோ?... எரிந்து கொண்டிருந்த விமானத்தில் தேடிய கேரள பயணி.. வைரல் வீடியோ
துபாய்: விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் தப்பியோடியபோது தனது லேப்டாப்பை கேரள பயணி ஒருவர் சாவகாசமாக தேடிய வீடியோ வைரலாகியுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 எண் கொண்ட, போயிங் வகை விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.
துபாய் நேரப்படி நேற்று மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது.
விமானம் சிறிது தூரம் பைலட் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதன்பிறகு இன்ஜின் வெடித்து பெரும் நெருப்பு வெளிப்பட்டது. புகை மண்டலமாக அந்த இடம் காட்சியளித்தது.
பயணிகள் அனைவரும் அவசர வழிகள் வழியாக துரிதமாக வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த ஒரு நிமிடத்தில் இன்ஜின் வெடித்துள்ளது. எனவே சற்று தாமதம் ஆகியிருந்தாலும், நெருப்பு அல்லது புகை மூட்டத்தால் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது.
அந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த துபாய் தொழிலதிபர், ஷாஜி கொச்சிகுட்டி ஷூவை கூட மாட்டாமல் வெறுங்காலில் தலை தெறிக்க தப்பியோடியதாக பேட்டியளித்தார். ஆனால், ஒரு பயணி, உயிர் போகும் ஆபத்து சூழ்ந்த நிலையிலும் கூட லேப்டாப்.. லேப்டாப்.. என அதை தேடிக்கொண்டிருந்துள்ளார்.
மலையாளத்தில் அவர் லேப்டாப்பை எடுத்து தாருங்கள் என கேட்பதும், அதை எடுத்துக்கொள்வதும், அப்போது பதிவான ஒரு அமெச்சூர் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள், எமெர்ஜென்சி எக்சிட் வழி வாயிலாக தப்பியோடுங்கள் என கூச்சலிடும் சத்தமும் வீடியோவில் கேட்கிறது. இதன்பிறகு விமானத்தில் இருந்து தப்பி குதிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications