சபதமேற்ற ஈரான் தலைவர் கமேனி! இஸ்ரேலுடனான மோதலில் பின்வாங்கப்போவதில்லை என உறுதி!
தெஹ்ரான்: இஸ்ரேல் உடனான மோதலில், நாங்களும் எங்கள் கூட்டாளிகளும் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உறுதியாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு, ஏற்கெனவே மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், அங்குள்ள எண்ணெய் வளங்களை முழுமையாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டே இஸ்ரேல் எனும் நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இஸ்ரேல் கடந்த காலங்களில் பெரிய அளவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. பாலஸ்தீனத்தையும், மொத்த மத்திய கிழக்கையும் இஸ்ரேல் விழுங்குவதற்கு முன் அதை காப்பாற்ற வேண்டும் என்று சில அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இதில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் மிக முக்கியமானதாகும். இது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டங்களை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு திடீரென இஸ்ரேலை, ஹமாஸ் தாக்கியது. இந்த தாக்குதலில் 1500 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஹமாஸை ஒழிப்போம் என இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது போரை அறிவித்தது.
போர் நடந்த ஓராண்டில் ஹமாஸ் ஒழியவில்லை. மாறாக 41,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும்தான் அதிகம். மேலே குறிப்பிட்டபடி, போர் என்பதே மனித குலத்திற்கு மிகப்பெரிய எதிரிதான். இருப்பினும், போருக்கு என சில விதிமுறைகள் இருக்கின்றன. பொதுமக்கள் போரால் எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டால் அது போர் குற்றமாக கருதப்படும் என ஐநா கூறுகிறது.
இருப்பினும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து இதைத்தான் செய்து வருகிறது. காசாவை தொடர்ந்து, லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல், பெய்ரூட் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த குண்டுகளிலிருந்து வெளிவரும் வெள்ளை பாஸ்பரஸ், மனித தோலை அரிக்கும் திறன் கொண்டதாகும். துணிகள் மீது பட்டாலும் எரிந்துவிடும். எனவே கடுமையான தீ காயத்தை ஏற்படுத்தும் பாஸ்பரஸ் குண்டுகளை போரின் போது பயன்படுத்துவது போர் குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும். இனி வரும் நாட்களிலாவது பெய்ரூட் மீது பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மறுபுறம் இந்த குற்றங்கள் எல்லாம் ஈரானை கடுமையா தூண்டியுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலை திரும்பப்பெறப்போவதில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் தலைவர் கமேனி, “இந்த தாக்குதல் சட்டப்பூர்வமானது. இரத்தவெறி கொண்ட இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இதுதான் பதிலடியாக இருக்கும். இந்த விவகாரத்தில் நாங்கள் பகுத்தறிவுடன் செயல்படுகிறோம். மனகிளர்ச்சியின் அடிப்படையில் நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து யேமன் வரை, ஈரானில் இருந்து காசா மற்றும் லெபனான் வரை இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைவோம். இந்த போரிலிருந்து நாங்களும் எங்களின் பங்காளிகளும் பின்வாங்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications