கிம் அக்காவின் "கும்" பொலிவு.. காரணம் லைப்போ?
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியானின் சகோதரி கோல் கர்தஷியாவின் முன்பை விட எடை குறைந்து, புத்தம் புதுப் பொலிவுடன், பளிச்சென திகழக் காரணம் லைப்போ சக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சும் எடைக் குறைப்பு ஆபரேஷன்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை பகிரங்கமாக சொல்லாமல் ரகசியம் காக்கிறார் கோல்.
முன்பை விட கச்சிதமான நெளிவு சுளிவோடு வனப்புற காட்சி தருகிறார் கோல் கர்தஷியான். அடடா.. நம்ம கோலா இது என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு மாறிப் போய் புதுப் பொலிவுடன் "அருள் பாலிக்கிறார்". ஆனால் இதற்கான காரணத்தை மட்டும் சொல்ல மாட்டேன் என்கிறார். வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்.

ஆனால் கோல், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக லைப்போ சக்ஷன் செய்துள்ளதாக ரேடார்ஆன்லைன் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இடுப்பு, தொப்பை, கால்களில் 3 மாதங்களுக்கு முன்பு கோல், லைப்போ செய்துள்ளார் என்றும் அந்த செய்தி் தெரிவிக்கிறது.
இந்த ஆபரேஷனுக்குப் பிறகு மிகவும் ஸ்லிம்மாகி விட்டதாக கோல் பெருமிதம் கொண்டுள்ளாராம். மேலும் தனது புட்டம் முன்பை விட எடுப்பாகவும், மிடுக்காகவும் இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.
தனது தங்கை கிம்மை விட இப்போது தான் அழகாக, கவர்ச்சியாக உள்ளதாகவும் கூறுகிறாராம் கோல். அதேசமயம், புட்ட அழகில் தனது தங்கை கிம்தான் தொடர்ந்து மகாராணியாக வலம் வருவதாகவும் பெருமை பொங்க கூறுகிறார் கோல்.












Click it and Unblock the Notifications