குவைத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஹைதீன் அப்துல் காதர் பங்கேற்பு
குவைத்: குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) கடந்த 13-06-2015 அன்று அன்று தஸ்மா டீச்சர்ஸ் சொஸைட்டி அரங்கத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

பொதுக்கூட்டம் ஃபோரத்தின் தமிழ் பிரிவு தலைவர் கிஃபாயதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும் ஃபோரத்தின் மண்டல தலைவர் சைஃபுத்தீன் மௌலவி முன்னிலை வகித்தார்.

மாலை 6.00 மணிக்கு மௌலவி அப்துல் ராசிக் ஆலிம் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். அமீர் ஹம்சா வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து சமூக ஒற்றுமை என்ற தலைப்பில் அபுதாகிர் அவர்கள் கீதம் உரைத்தார், விடுதலை என்ற தலைப்பில் அப்பாஸ் அவர்கள் கவிதை வாசித்தார்.

தொடர்ச்சியாக மௌலவி கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள் ரமலான் என்ற தலைப்பில் ரமலானின் சிறப்புகளை பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "சமகால பிரச்சனைகளும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) தமிழ் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் தனது உரையில் "இன்று இந்தியாவில் மக்கள் சந்திக்கும் குறிப்பபாக முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி எடுத்துக் கூறி அதற்கான தீர்வை அடைவதற்கான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கி கூறினார்".

இறுதியாக உஸ்மான் அலியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ஜாகிர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications