கிம் உயிருடன்தான் இருக்கிறார்.. ஆனால் அவரால்.. வடகொரியாவிலிருந்து ஒரு தகவல்

Subscribe to Oneindia Tamil

பியாங்கியாங்: கிம் ஜாங் உன் உயிருடன்தான் இருக்கிறார் என்றும் ஆனால் அவரால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் வடகொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கிம் உயிருடன்தான் இருக்கிறார்.. வடகொரியாவிலிருந்து ஒரு தகவல்

    36 வயதான கிம் ஜாங் உன் கடந்த 15-ஆம் தேதி முதல் அவர் பொது வெளியில் காணவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர்.

    இது போல் கடந்த 2014 ஆம் ஆண்டும் இவர் ஒரு மாதத்திற்கு காணாமல் போனார் அப்போதும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவே கூறப்பட்டது. எனினும் அவர் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் முன் தோன்றினார்.

    கோவிட் 19

    கோவிட் 19

    2014-ஆம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே அவர் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது கோவிட் 19 பாதிப்பிலிருந்து தப்ப அவர் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் சிலரோ அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த பிறகு மூளைச் சாவு அடைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

    வடகொரியா

    வடகொரியா

    கிம் ஜாங் உன் குறித்து இதுவரை எந்தவித உறுதியான தகவல்களும் வரவில்லை. இந்த நிலையில் வடகொரியாவின் முன்னாள் தூதர் தே யாங் ஹோ சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் தலைவர் மட்டுமில்லை. கிம் சங்கின் பேரனும் ஆவார். அவருக்கு உண்மையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என எனக்கு தெரியவில்லை.

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு தெரியும். அவர் உயிருடன்தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து கூட நிற்க முடியாத நிலை உள்ளது. எழுந்து நின்றாலும் நடக்க முடியவில்லை. அவரது உடல் எடை 20 கற்களுக்கு சமமாக உள்ளது. உடல் பலவீனமாக உள்ள நிலையில் அவரது உடல் எடையுடன் அவர் போராடி வருகிறார். 36 வயதாகும் அவர் எப்போதும் சிகரெட் பிடித்தபடி இருப்பார். அவர் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுகளையே உட்கொண்டார்.

    உண்மை

    உண்மை

    கிம் இறந்துவிட்டார் என்றும் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் ஜப்பான் மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் தகவல்கள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். உண்மையில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை உறுதி செய்பவர்கள், அவரது மனைவியும் அவரது சகோதரியும் ஆவார்கள். எனவே அவர் எங்கிருக்கிறார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை.

    ஒரு மணிநேரம்

    ஒரு மணிநேரம்

    கடந்த 2011-ஆம் ஆண்டு கிம்மின் தந்தை உயிரிழந்ததையே 51 மணி நேரம் கழித்துதான் அறிவித்தார்கள். இவ்வளவு ஏன் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கே 51 மணிநேரம் கழித்து வெளியுலகிற்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் சொல்லப்பட்டது. அத்தனை விதமாக ரகசியங்களை அந்நாடு காக்கும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+