என்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு?
பீஜிங்: தலைவன் வந்துட்டாருடா.. என ஆரவாரித்துக் கொண்டிருக்கிறார்கள், கிம் ஜாங் உன் ஆதரவு ரசிக சிகாமணிகள். குழந்தை முகம்.., அமுல் பேபி மாதிரி உருவம்.. என, பார்த்ததுமே கன்னத்தை பிடித்து கிள்ளி, கொஞ்சத் தூண்டும் அழகன்தான் கிம்.
Recommended Video
இதனால்தானோ என்னவோ, நாட்டு எல்லைகளை தாண்டி, உலகம் முழுக்க கிம்முக்கு ஒன்று என்றால் பதறிப்போகிறார்கள் மக்கள். ஏப்ரல் 12ம் தேதி முதல் ஆளை காணோம் என்று செய்தி வந்ததுமே, கிம்முக்கு என்னாச்சு என, பக்கத்து வீட்டு ஜோதிடரிடம் பீதியோடு வினவியவர்கள் தமிழ்நாட்டிலேயே நிறைய பேர் இருக்கிறார்களாம்.
குழந்தைச் சாமி.. மீண்டு வரனுமே என, மக்கள் வேண்டாத சாமியே கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உலகம் ஆயிரம் சொன்னாலும், மக்களை ஈர்க்கும் ஆதர்ஷ நாயகன் கிம் என்பதற்கான அறிகுறிகள்தான் இவை.

போட்டோவை பாருங்க
யாருடைய வேண்டுதல் பலித்ததோ தெரியாது.. இன்று கிம் ஜாங் உன், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோவை வெளியிட்டு வயிற்றில் பால் வார்த்துள்ளது வட கொரியா ஊடகம். உரத் தொழிற்சாலை ஒன்றின் துவக்க விழாவில் கிம் பங்கேற்றதாக அந்த ஊடகம் கூறியுள்ளது. அதுவா முக்கியம். கிம் நல்லா இருக்காறே, அதுவே போதும் என பெருமூச்சு விட்டனர் அவர்கள் ரசிகர்கள். ஆனால், கிம் பழைய பன்னீர் செல்வமாக வரவில்லையே என்ற வாட்டம் இருப்பதை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. என்ன இப்படி சொல்லிட்டீங்கன்னு கேக்குறீங்களா. அப்போ நீங்க கிம் போட்டோவ சரியா பார்க்கலைன்னு அர்த்தம் பாஸ். நல்லா உத்துப் பாருங்க. என்ன சொல்றோம்னு தெரியும்.

வெயிட் போட்டிடுச்சே
36 வயதுதான் கிம்முக்கு. ஆனால் உடம்பு எடையோ 124 கிலோ. மாட்டிறைச்சியும், மதுபானமாக குடித்து வளர்த்த உடம்பு அது. ஆனால், இப்போது வெளியான போட்டோவில், மனுஷன் இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கார். கன்றுக் குட்டி மாதிரி இருந்தவர், இப்போ பசு மாதிரி மாறியிருக்கிறார். அவர் சைசை பார்த்தால் தெரிகிறது. இத்தனை நாட்கள் ஓய்வில் இருந்ததால் குண்டானாரா, அல்லது, ஏதேனும் மருந்து, மாத்திரையின் பக்க விளைவா, என்றுதான் தெரியல.

அந்த சிரிப்பு மிஸ்சிங்
இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனிச்சீங்களா. பழைய போட்டோக்களில் இருக்கும் முகப் பொலிவு இதில் இல்லை. முகத்தில் சோர்வு தெரியுது. நிக்கிறப்ப கூட ரொம்ப டயர்டா தெரிகிறார். அவரோட பழைய கம்பீரம் கம்மியா இருக்கிற மாதிரி தெரியுது. சிரிப்பில் கூட பழைய பட்டாசைக் காணோம். அவர் டிரேட் மார்க்கே, அந்த குழந்தைத்தனமான சிரிப்புதான். ஆனால், இதில் ரொம்பவே கஷ்டப்பட்டுதான் புன்முறுவல் பூத்துள்ளார் கிம். கண்ணில் ஒரு ஸ்ட்ரெயின் தெரிகிறது.

யாரு அது தங்கச்சியா?
அந்த போட்டோவில், இன்னொரு விஷயத்தை நிறைய பேரு கண்டிப்பா கவனிச்சீருப்பீங்க. ஏன்னா, கூட நிக்குறது பொண்ணாச்சே. முட்டி வரை டிரஸ் போட்டு கிம் பின்னால் நின்று கொண்டிருக்கும் பெண் அவரோட தங்கச்சியா இருக்குமோ என்றுதான் உங்களை மாதிரி நாங்களும் பார்த்தோம். ஆனா, அது அவர் தங்கச்சி இல்ல. முகங்களில் பெரிய வேறுபாட்டை நம்மால் கண்டுபிடிக்க முடியாததன் விளைவுதான் இந்த சந்தேகம். அந்த பொண்ணு, ரிப்பன் கட் செய்ய கத்திரி கோல் வைக்கும் பிளேட் கொண்டு வந்த பெண்ணாம். தங்கையை பக்கத்தில் காணவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications