என் மகள் வளர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்தால் ஆதரிப்பேன்: கிம் கர்தாஷியன்
வாஷிங்டன்: அமெரிக்க டிவி நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் எதிர்காலத்தில் தனது மகள் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க அனுமதிப்பாராம்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் பத்திரிக்கை ஒன்றுக்கு அண்மையில் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். முன்பும் ஒரு முறை அவர் இங்கிலாந்து பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். அதை பார்த்த அவரது தங்கை கென்டால் ஜென்னர் தானும் பதிலுக்கு நிர்வாண போஸ் கொடுத்தார்.

இந்நிலையில் 34 வயதாகும் கிம் ரேடியோவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

என் மகளுக்கு 1 வயது ஆகிறது. அவர் வளர்ந்த பிறகு நிர்வாணமாக கேமராவுக்கு போஸ் கொடுக்க விரும்பினால் அதை ஆதரிப்பேன். நான் என் உடலை பற்றி பெருமைப்படுவதால் நிர்வாணமாக போஸ் கொடுத்தேன். பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக உள்ளதால் அப்படி போஸ் கொடுத்தேன் என்றார்.
அவர் தனது உடல் சிக்கென்று இருக்கும் வரையில் புகைப்படங்களுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications