• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலை பாய்வதில் அமெரிக்கர்களும் நம்மை போலத்தான்.. கிம்மைக் காண முண்டியடித்த அமெரிக்க வீரர்கள்!

|

அபுதாபி: அபுதாபியில் முகாமிட்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் யுஎஸ்எஸ் சான்டியாகோ போர்க்கப்பலுக்கு கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியாவின் விசிட் அடித்து அமெரிக்க கடற்படை வீரர்களைச் சந்தித்து அளவளாவினார். அப்போது கிம்முடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும், செல்பி எடுத்துக் கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் வீரர்கள் அலைமோதியதால் கப்பலே சற்று தள்ளாடித்தான் போனது.

கலர்புல் டிரஸ், கண்களை மறைக்கும் கூலர் என கலக்கலாக வரும் நடிகையரை, நடிகர்களைப் பார்க்க நம்ம ஊரில்தான் ரசிகர்கள் அலை மோதுவார்கள். ஆனால் அமெரிக்கக் கடற்படையினரோ, கப்பலே ஆடிப் போய்விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு, கிம்மைப் பார்க்க வரிசை கட்டி நின்றது, வியப்பாகத்தான் இருந்தது.

கிம்மும் சளைக்கவில்லை. வீரர்களுடன் சேர்ந்து நின்று போஸ் கொடுத்தார். முத்தமிட்டார், ஜாலியாகப் பேசினார், ஜோக் சொன்னார்... மொத்தத்தில் அபுதாபிக் கடல் கிம்மின் விசிட்டால் ஜில்லிட்டுப் போனது.

படை வீரர்களுக்கு பூஸ்ட் கொடுக்க அவ்வப்போது இதுபோல பிரபலங்கள் வெளிநாடுகளில் முகாமிட்டுள்ள படையினரை சந்திக்க போய் வருவார்கள். இது தங்களுக்காகப் பாடுபடும் படையினருக்கு நன்றி சொல்வதற்கான விசிட்டாக அமையும். குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இதுபோல போய் வருவார்கள். அந்த வரிசையில் ரியாலிட்டி ஸ்டாரான கிம்மும் அபுதாபிக்கு ஒரு விசிட் அடித்தார்.

நவம்பர் 24ம் தேதி அவர் அபுதாபியில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு விசிட் அடித்தார். அவரது வருகையால் போர்க் கப்பலில் இருந்த படை வீரர்கள், அதிகாரிகள், பெண்கள், ஊழியர்கள் வியப்படைந்தனர், பூரிப்படைந்தனர்.

இதற்கு முன்பு எலிசபெத் டெய்லர், மர்லின் மன்றோ ஆகியர் இந்தக் கப்பலுக்கு வந்துள்ளனராம்.

சான்டியாகோ கப்பலுக்கு வந்த கிம், அங்கு படை வீரர்களைச் சந்தித்து உற்சாகமாகப் பேசினார். அவர்களுடன் சேர்ந்து நின்று போட்டோக்களுக்குப் போஸ் கொடுத்தார். செல்பி எடுத்தவர்களுக்கும் போஸ் கொடுத்தார்.

Kim Kardashian boosts morale with weapons of mass distraction aboard US aircraft carrier in Abu Dhabi

காக்கி நிற கீழாடையும், கிரே கலர் மேலாடையும் அணி்ந்து அடக்கம் ஒடுக்கமாக வந்திருந்தார் கிம். இது பல வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் கிம்மின் பின்னழகு வழக்கம் போல ரசிக்கும்படியாக இருந்தது.

34 வயதான கிம், துபாயிலிருந்து அபுதாபிக்கு வந்திருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், இப்போதுதான் கலீபா துறைமுகத்தில் உள்ள அமெரிக்க போர்க் கப்பலுக்கு போய் வந்தேன். அருமையான பயணம், நன்றி சொல்ல அருமையான தருமம். அருமையான அனுபவம்.. அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் கிம்.

கப்பல் பயணத்தின்போது கப்பலையும் சுற்றிப் பார்த்தார் கிம். அவருக்கு போர்க் கப்பல் குறித்து அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.

பீரங்கி மீது ஏறி அமர்ந்தும் ஒய்யாரமாக போஸ் கொடுத்தார் கிம். அவரும் கூட செல்பி எடுத்துக் கொண்டார்.

கிம்மைக் காணவும், கை குலுக்கவும் ஆண் வீரர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் கூட அலை மோதினர் என்பது முக்கியமானது.

கடந்த 1954ம் ஆண்ட மர்லின் மன்றோ தனது தேனிலவை ரத்து செய்து விட்டு பாதியில் இந்த கப்பலுக்கு வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும் ஐந்து நாள் படையினருக்காக அவர் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.

அதேபோல எலிசபெத் டெய்லரும் அடிக்கடி வந்து போயுள்ளார். இந்தக் கப்பல் மட்டுமல்லாமல் வேறு சில அமெரிக்க போர்க்கப்பல்களுக்கும் அவர் போயுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Kim Kardashian secured her patriotic pin-up status with a trip to raise morale among the armed forces this Thanksgiving. The reality star showcased her charitable side as she toured the USS San Diego stationed in Abu Dhabi on November 24 - surprising delighted servicemen, women and staff. Kardashian is the latest star to carry out the morale-boosting tradition of a celebrity visit to stationed troops and follows in a prestigious line of well-wishers from Marilyn Monroe to Elizabeth Taylor and the unrivaled Bob Hope.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more