சவூதி இளவரசருடன் ஒரு ஈவ்னிங்... 10 லட்சம் டாலர் கட்டணத்திற்கு கிம் கர்தஷியான் 'புக்கிங்'?!
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியான் குறித்த ஒரு பரபரப்புத் தகவல் சவூதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளில் வலம் வந்து கொண்டுள்ளது. அதாவது சவூதி அரேபிய இளவரசருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க அவர் 10 லட்சம் டாலர் பணம் கட்டணமாக பெற்றுள்ளார் என்றும், விரைவில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
இந்த மாதமே அந்த விருந்து நடைபெறவுள்ளதாகவும், இதற்காக கிம் சவூதி வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பார்ட்டியில் சிறப்பு விருந்தினராக கிம் கலந்து கொள்ளவுள்ளாராம்.

அந்த இளவரசர், இன்ஸ்டாகிராம் மூலமாக கிம்மைத் தொடர்பு கொண்டு பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தாராம். ஒரு இரவு 10 லட்சம் டாலர் தருவதாகவும் அவர் கூறினாராம். அதை கிம் ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு அடெல் அல் ஒடாபி என்பவர், கிம்மின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இவர்தான் அந்த இளவரசர் என்று கூறப்படுகிறது.
இந்த ஆஃபரை கிம் உடனடியாக ஏற்றுக் கொண்டு விட்டதாக மீடியாடேக்அவுட் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இது குறித்து கிம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சவூதி அரேபியா முழுவதும் இதே பேச்சாக உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு பஹ்ரைனுக்குப் போயிருந்தார் கிம். அப்போது பெரும் கூட்டம் கூடி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் அளவுக்கு நிலைமை போனது. சவூதி அரேபிய ராஜ குடும்பத்தினர் நடத்தும் பார்ட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக கிம் போன்ற அழகிகள் அழைக்கப்படுவது புதிதல்ல. அதன் மூலம் அவர்களுக்கு நல்ல பணமும் கிடைப்பதால் உடனடியாக கிளம்பி வந்து விடுகிறார்கள்.
கடந்த 2013ம் ஆண்டு துர்க்மேனிஸ்தான் அதிபரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதற்காக 10 லட்சம் டாலர் பணம் கட்டணமாக பெற்று வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல லண்டனில் கடந்த ஆண்டு நடந்த புரூனே சுல்தானின் மகன் நடத்திய விழாவில் நடிகை மரியா கேரி 10 லட்சம் பவுண்டு பணம் பெற்றுக் கொண்டு வந்து சென்றிருந்தார்.
இப்போது கிம் பெயர் அடிபடுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications