கங்கிராட்ஸ்.. கிம்முக்கு ஜம்முன்னு ஒரு பையன் பொறந்திருக்கான்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கிம் கார்தாஷியனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தனது மகனுக்கு செயின்ட் வெஸ்ட் என்று பெயர் வைத்திருக்கிறாராம். இந்த தகவலை கிம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கிம் பிரபல பாடகர் கான்யே வெஸ்ட்டை காதலித்து கர்ப்பமானார். இதையடுத்து அவர் நார்த் வெஸ்ட் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகு கிம்மும், கான்யேவும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த குழந்தை விரைவில் தனது 2வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது. இந்த நிலையில் கிம் தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

நார்த் வெஸ்ட்
கடந்த 2013ம் ஆண்டு மகள் நார்த் வெஸ்ட்டை பிரசவித்த சமயத்தில் அவருக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.

2வது கர்ப்பம்
இரண்டாவது முறை கர்ப்பமாக விரும்பிய கிம் தனது கணவருடன் தினமும் 25 முறை உடலுறவு கொண்டும் கர்ப்பமாகவில்லையாம். காரணம் கர்ப்பையில் பிரச்சினை ஏற்பட்டதாம். கருப்பை பிரச்சினையை மருத்துவர்கள் கண்டுபிடித்து அதை சரி செய்த பின்னர் இரண்டாவது முறையாக கர்ப்பமானர் கிம்.

ஆண்குழந்தை பிரசவம்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதாவது டிசம்பர் 8ம் தேதி அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார் கிம். தனது மகனுக்கு செயின்ட் வெஸ்ட் என்று பெயரிட்டுள்ளார் கிம். இதனை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்
தனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு கிம் தெரிவித்ததுதான் தாமதம், உடனே அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனராம். மழை வெள்ளத்தில இது ரொம்ப முக்கியமான செய்தியா என்று கேட்பது காதில் விழுகிறது மக்களே... வேறு என்ன செய்ய இதையும் நாங்கதானே உங்களுக்கு சொல்லனும்.












Click it and Unblock the Notifications