அப்படியே "கிம்" மாதிரியே... "ஹாட்" ஃபோட்டாக்களால் கலங்கடிக்கும் கமிலா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அச்சு அசல் கிம் கர்தஷியான் போலவே வளைவு நெளிவுகளுடன் இருக்கும் கமிலா என்ற பெண் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்க அடித்து வருகிறார்.
எடுப்பான பின்னழகுடன் அமெரிக்க ரியாலிட்டி ஷோக்களை சூடாக்கி வருபவர் கிம். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள்.
இவரைப் பற்றி செய்தி வராத நாளே இல்லை.. ஏன் இவரது பெயரில்தான் உலக அளவில் அதிக அளவில் கம்ப்யூட்டர் வைரஸ்களையும் பரப்புகிறார்கள் குசும்பர்கள்.

மீண்டும் கர்ப்பம்...
கென்யே வெஸ்ட் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயான கிம் தற்போது 2வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

கிம் மாதிரியே...
கிம்மைப் போலவே மாற நினைத்து ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் எக்கச்சக்கம். ஆனாலும் கிம்மைப் போல மாற முடியாதவர்கள்தான் அதிகம்.

கிம்மின் ஜெராக்ஸ்...
இந்நிலையில் கிம்மைப் போலவே முகத் தோற்றத்தில் மட்டுமல்லாமல், உடற்கட்டிலும் காணப்படுகிறார் கமிலா என்ற பெண். இவரும் கிம்மைப் போன்றே கவர்ச்சியான உடைகளை அணிந்து, தன்னைப் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இரட்டைப் பிறவிகளா...
ஏற்கனவே கிம் போதையில் காணப்படும் ரசிகர்கள், கமிலாவைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிப் போயுள்ளனர். அவர் கிம்மிற்கு தூரத்து உறவா அல்லது கிம்மும், கமிலாவும் இரட்டைப் பிறவிகளா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

67000 ரசிகர்கள்...
பேஷன் டிசைனராக இருக்கும் கமீலா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தற்போது அவரை 67 ஆயிரம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

விதவிதமான போட்டோக்கள்...
கமீலாவும் வஞ்சனையே இல்லாமல் நாள்தோறும் தனது விதவிதமாக படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். சிலர் கிம்மைப் போல மாறுவதற்கு ஏதேனும் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை செய்து கொண்டீர்களா என கமிலாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திரிஷா இல்லணா நயன்தாரா .. ரசிகர்களும் இனிமேல் கிம் இல்லண்ணா கமிலா என்ற "ஜென்" நிலைக்கு மாறி விட வேண்டியதுதான்!












Click it and Unblock the Notifications