For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21 வருட சிறை தண்டனைக்கு விடிவு.. அதிபர் டிரம்பை சந்தித்து மூதாட்டியை விடுதலை செய்த கிம் கர்தஷியான்

அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கிம் கார்டஷியன் வெஸ்ட், அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து 62 வயது பெண் ஒருவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியான் வெஸ்ட், அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து 62 வயது பெண் ஒருவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அலிஸ் மரியா ஜான்சன் என்ற பெண், கடந்த 1996ல் போதை பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு 41 வயது. தன்னுடைய மகனை விபத்தில் இழந்துவிட்டு, வேலையை இழந்து விட்டு, திருமணம் விவாகரத்தில் முடிந்த காரணத்தால் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார்.

Kim Kardashian meets with Trump leads to a release of Life Imprisoned Old Lady

அதே சமயம் சிலருக்கு அவர் போதை பொருளும் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. பெயில் வாங்க முடியாத ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இவரை அமெரிக்காவும் அப்படியே மறந்து போனது.

இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியான் வெஸ்ட், அமெரிக்க அதிபர் டிரம்பை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார். இந்த சந்திப்பில் பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து கிம், திறம்படம் பேசினார். இந்த சந்திப்பு பெரிய அளவில் பிரபலம் ஆனது.

அந்த சந்திப்பில் கிம், மரியா ஜான்சன் குறித்து பேசியுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இப்போது உண்மையிலேயே கிம் கோரிக்கையின்படி மரியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தன்னுடைய சொந்த முயற்சியின் படி இந்த முடிவை எடுத்துள்ளார். மரியா பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார், அவரை விடுதலை செய்வதே சிறந்தது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

English summary
Kim Kardashian meets with Trump leads to a release of Life Imprisoned Old Lady named Alice Marie Johnson in America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X