வந்தாச்சு 2026 புத்தாண்டு! உலகின் முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி, நியூசிலாந்து! கொண்டாட்டங்கள் கோலாகலம்
கிரிபாட்டி: உலகிலேயே முதல் நாடாக 2026 புத்தாண்டை கிரிபாட்டி தீவு வரவேற்றது. பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் தான் 2026 புத்தாண்டு முதல்முறையாகப் பிறந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நியூசிலாந்தும் புத்தாண்டை வரவேற்றது. ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது.
2025ம் ஆண்டு கடைசி நாளில் நாம் இருக்கிறோம். உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். டைம் ஜோன்படி புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். இதற்கிடையே பூமியின் கிழக்குப் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளன. சில இடங்களில் புத்தாண்டு பிறந்தும்விட்டது.

உலகில் முதல் நாடாக 2026ஐ கிரிபாட்டி தீவு வரவேற்றது. பசிபிக் தீவில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது. அதைத் தொடர்ந்து 4 மணிக்குப் பிறகு நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கிறது. அப்படியே மெல்லக் கிழக்கில் இருந்து ஒவ்வொரு நாடாக வரிசையாகப் புத்தாண்டு பிறக்கும்.
பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி நாட்டின் ஓர் அங்கமான கிறிஸ்துமஸ் தீவு தான் உலகிலேயே முதல் நாடாக 2026 ஆம் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டியின் பிற பகுதிகள் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டை வரவேற்கவுள்ளன. இந்தத் தீவு, ஹவாய் தீவுக்குத் தெற்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கிலும் அமைந்துள்ளது.
இந்த கிரிபாட்டி நாடு பெரும்பாலான நாடுகளைப் போலவே பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் இருந்து 1979இல் சுதந்திரம் பெற்றது. தென் பசிபிக்கின் மிக பெரிய கடல்வாழ் உயிரினக் காப்பகத்திற்குத் தாயகமாக இது இருக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாகக் கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதனால் கிரிபாட்டி தீவு மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.
சுமார் 1.16 லட்சம் மக்களைக் கொண்ட இந்த கிரிபாட்டி, ஹவாய் தீவுக்கு நேர் தெற்கே அமைந்துள்ளது. இருந்த போதிலும் ஹவாய் தீவு 24 மணி நேரம் கழித்தே பிறந்த நாளை வரவேற்கிறது. ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. சிட்னி, மெல்போர்ன், கான்பெரா உள்ளிட்ட இடங்களில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டினர்.












Click it and Unblock the Notifications