அனுஷ்காவிற்காக அசத்தலாக பாடிய புதுமாப்பிள்ளை.. கோஹ்லி என்ன பாடினார் தெரியுமா? -வீடியோ
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
Recommended Video

ரோம்: இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.
அதன்படி திருமணம் முடிந்த பின் நடந்த சிறிய நிகழ்வு ஒன்றில் கோஹ்லி அனுஷ்காவிற்காக பாடல் ஒன்று பாடியுள்ளார். அவர் பாடல் பாடும் நிகழ்வை அவரது உறவினர் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அவர் அழகாக பாடும் அந்த நிகழ்வில் அனுஷ்கா சர்மா அப்படியே பிரமிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

திருமணம்
அனுஷ்கா சர்மாவும் கோஹ்லியும் கடந்த 2013ல் இருந்து தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் திருமணம் நேற்று இத்தாலியில் இருக்கும் மிலன் நகரில் நடைபெற்றது. இந்த விழா மிகவும் ரகசியமாக நடந்தது. மேலும் நெருங்கிய சொந்தங்களும், நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். எந்த கிரிக்கெட் வீரரும் இந்த திருமணத்திற்கு அழைக்கபடவில்லை .
|
வைரல் ஆனது
இந்த நிலையில் இவர்கள் திருமண செய்தி இணையம் முழுக்க வைரல் ஆனது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களின் திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்த வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கிறது.
|
கோஹ்லி பாடினார்
இந்த நிலையில் இந்த திருமணம் முடிந்த பின் நிறைய சிறு சிறு விழாக்கள் அங்கு நடந்தது. அப்போது இரவில் நடந்த விழா ஒன்றில் கோஹ்லி அனுஷ்கா சர்மாவிற்காக பாடினார். இந்த பாடலை கேட்டு அனுஷ்கா அப்படியே மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

பாடல் என்ன
கோஹ்லி அனுஷ்காவை பார்த்து ஹிந்தி பாடல் பாடினார். 1964ல் வெளிவந்த 'மிஸ்டர். எக்ஸ் இன் பாம்பே' என்ற படத்தில் வெளிவந்த 'மேரே மேஹபூப்' என்ற பாடலை பாடினார். காதல் பாடலான இது ''என் காதலி உன் தெருக்களில் இன்று காதல் வலம் வரும்'' என்பது போல மிகவும் அழகாக செல்லும். அவர் இந்த பாடலை பாடுவதை உறவினர்கள் அனைவரும் ரசித்துக் கொண்டு இருந்தார்கள். கோஹ்லி இதற்கு முன்பே சில நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியிருந்தாலும், இது கொஞ்சம் ஸ்பெஷல்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications