பிரபலமாவதற்காக "கும்" வீடியோ எடுத்த கிம்.. "லீக்" ஆக உதவிய தாய்... நல்லதொரு குடும்பம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கர்தாஷியன் டைனாஸ்டி புத்தகத்தின்படி நடிகை கிம் கர்தாஷியனின் செக்ஸ் வீடியோவை கசியவிட அவரது தாய் கிறிஸ் ஜென்னர் உதவி செய்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
நடிகைகளான கர்தாஷியன் சகோதரிகள் குறித்து இயன் ஹால்பெரின் 'கர்தாஷியன் டைனாஸ்டி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பிரபலமாகத் துடித்த கிம்முக்கு பெரிய பணக்காரரான பாரீஸ் ஹில்டன் அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது செக்ஸ் வீடியோ எடுத்து அதை வெளியிட்டால் நிச்சயம் பிரபலம் ஆகிவிடலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

கிம்
பிரபலமாக வேண்டும் என்று விரும்பிய கிம் அப்போது பாடகர் ரே ஜேவை காதலித்து வந்தார். இதையடுத்து அவர் ரே ஜேவுடன் வீட்டில் உறவு கொண்டு அதை வீடியோ எடுத்து வெளியிட திட்டமிட்டார். இது அவரது குடும்பத்தாருக்கும் தெரியும் என்று இயன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் ஜென்னர்
கிம்மின் செக்ஸ் வீடியோ வெளியாக அவரது தாய் கிறிஸ் ஜென்னர் தான் உதவி செய்ததாக இயனின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபலங்களின் செக்ஸ் வீடியோ எப்படி வெளியாகிறது என்பதை கண்டுபிடிக்க ஆபாச பட வினியோகஸ்தர் போன்று நடித்து ஆய்வும் செய்திருக்கிறார் இயன்.

வீடியோ
பிரபல மாடல் மற்றும் கூடைப்பந்து வீரரின் செக்ஸ் வீடியோ தன்னிடம் இருப்பதாகக் கூறி இயன் மாடல் ஒருவர் உதவியுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விவிட் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். செக்ஸ் வீடியோவை வெளியிட இரு தரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என விவிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிம் வீடியோ
கிம்மின் செக்ஸ் வீடியோ உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று இயன் விவிட் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அது, மூன்றாம் நபர் ஒருவர் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளது. கிம்மும், கிறிஸ் ஜென்னரும் செக்ஸ் வீடியோவை வெளியிட விவிட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெத்திட்டார்களாம்.

புத்தகம்
கடந்த 2007ம் ஆண்டு கிம்மின் செக்ஸ் வீடியோவை விவிட் நிறுவனம் வெளியிட்டது. அதை கண்டித்து கிம் விவிட் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்தாஷியன் டைனாஸ்டி புத்தகம் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வெளியாகிறது.












Click it and Unblock the Notifications