’ப்ளேபாய்’ பத்திரிகையின் முதல் இந்திய புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன்!

Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேஷன் பத்திரிகையான ப்ளேபாய் இதழில் பணியாற்றும் வாய்ப்பு முதல்முறையாக ஒரு இந்தியப் புகைப்பட கலைஞருக்குக் கிடைத்துள்ளது. அவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.ராமச்சந்திரன்.

பிரபல நடிகைகள் டாப்ஸி, சுனைனா, சஞ்சனா, சுஜா வாருணீ, பிரதாயினி, ரகுல் ப்ரீத்தி சிங், ரன்யா உட்பட பலரையும் விதவிதமான கோணங்களில் தன் கேமராவால் படம்பிடித்தவர் எல்.ராமச்சந்திரன்.

இந்தியாவின் முன்னணி மாடல்கள் பலரையும் விளம்பரங்கள், பேஷன் நிகழ்ச்சிகளுக்காக படமெடுத்திருக்கிறார். இவர் எடுத்த புகைப்படங்கள் பல முன்னணி இதழ்களின் அட்டைகளை அலங்கரித்துள்ளன.

பல்வேறு போராட்டங்களைத் தாண்டி முதல் முறையாக ப்ளேபாய் பத்திரிகையின் அட்டைகளில் ஒரு தமிழ்ப் புகைப்பட கலைஞர் எடுத்த படங்கள் இடம்பெற்று உலக அளவில் சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை அத்தனை சுலபத்தில் ராமச்சந்திரனுக்கு சாத்தியமாகிவிடவில்லை.

இதற்காக அமெரிக்கா சென்று ப்ளேபாய் பத்திரிகை நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். அங்கு ப்ளேபாய் பத்திரிகையைச் சேர்ந்த ஜர்மோ போஜனிமி, கேரிகோல், அலெக்ஸ் பிராவின்கார் ஆகியோரைச் சந்தித்தார். ராமச்சந்திரன் எடுத்த படங்கள் அவரது பின்னணியை பார்த்து, அவருக்கு ஒரு போட்டி வைத்தனர். அதில் வெற்றிகரமாக தேறியபிறகு கிரீஸ் நாட்டில் உள்ள சாண்டோரினி என்ற இடத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

L Ramachandiran, the first play Boy photographer from India

அதன்பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள ப்ளேபாய் அலுவலகத்தில் இருந்து ராமச்சந்திரனுக்கு அழைப்பு வந்தது.

இப்போது ப்ளேபாய் பத்திரிகையின் இரண்டு இதழ்களின் அட்டைகளில் ராமச்சந்திரன் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளன.

இதைத் தொடர்ந்து லண்டன், மயாமி, உக்ரெயின், க்ரீஸ் மற்றும் ஆசிய நாடுகளின் ப்ளேபாய் பதிப்புகள், ஆப்ரிக்க ப்ளேபாய் பதிப்புகள், ஐரோப்பிய நாடுகளின் ப்ளேபாய் பதிப்புகளின் அட்டைகளில் நம்ம ஊர் ராமச்சந்திரன் எடுத்த புகைப்படங்கள் தான் இனி அலங்கரிக்கbfருக்கின்றன.

உலகின் முன்னணி மாடல்களான Kata Rina Bencek, Jaciya Swedberg, Jade Amber Williams, Taryn Walker, Ralitsa Ivanova போன்ற மயாமி, துருக்கி, லாஸ் ஏஞ்சல்ஸ், சண்டோரினி, இங்கிலாந்து, பாங்காக், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல்வேறு ரம்மியமான இடங்களில் வைத்து படமெடுத்துள்ளார் ராமச்சந்திரன.

இப்படி உலகமெங்கும் உள்ள பிரபல அழகிகளை படமெடுக்கும் ராமச்சந்திரனின் சொந்த ஊர் நம்ம ஊர் கும்பகோணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+