கராச்சியில் நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருக்கும் குலிஸ்தான் இ ஜவ்ஹார் பகுதியில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் வசித்து வந்த 3 மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரும், மீட்புக் குழுவினரும் சுமார் 5 மணிநேரம் போராடி 13 உடல்களை மீட்டுள்ளனர். அதில் 7 உடல்கள் குழந்தைகளுடையது. இந்த விபத்தில் பலியான 7 குழந்தைகளில் ஒன்று 6 மாத பெண் குழந்தை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஜாவித் ஜஸ்கானி தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவால் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கவலை தெரிவித்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications