5 நிமிடத்தில் 10 முறை எச்சரிக்கை விடுத்த பின் ரஷ்யா விமானத்தை வீழ்த்தினோம்: ஐ.நா.விடம் துருக்கி
அங்காரா: தங்களது வான்பரப்பில் ஊடுருவிய ரஷ்யா விமானங்களுக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரே சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கி மூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலிடம் துருக்கி விளக்கம் கொடுத்துள்ளது.
சிரியா-துருக்கி வான்பரப்பில் பறந்த ரஷ்யா போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. முதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது எந்த நாட்டு விமானம் எனத் தெரியாமல் இருந்தது. பின்னர் ரஷ்யா, தங்களது போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து துருக்கியுடனான ராணுவ ஒத்துழைப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் பான்கிமூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்த சம்பவம் தொடர்பாக துருக்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இந்த விளக்க கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
Turkey's statement: Claims Russia violated airspace for just "17 seconds" with very slow 243 miles/hour jet. pic.twitter.com/knhdy0RWIA
— WikiLeaks (@wikileaks) November 24, 2015 அதில், 2 சுகோய்-24 ரக விமானங்கள் துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்தன. அப்போது 5 நிமிட இடைவெளியில் 10 முறை அவசர எச்சரிக்கையை விடுத்து துருக்கி வான்பரப்பை விட்டு வெளியே செல்லுமாறு எச்சரித்தோம். ஆனால் இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் துருக்கி வான்பரப்புக்குள் 19 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானங்கள் ஊடுருவின.
அப்போது ஒரு விமானம் துருக்கி வான்பரப்பை விட்டு வெளியேறியது. 17 வினாடிகள் துருக்கி வான்பரப்பில் பறந்த மற்றொரு விமானத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துருக்கியின் எஃப்-16 ரக போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அந்த விமானம் சிரியா- துருக்கி எல்லையில் சிரியா பகுடிக்குள் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துருக்கி வான்பரப்புக்குள் தங்களது விமானங்கள் ஊடுருவவில்லை; சிரியா வான்பரப்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மற்றும் இதர தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications