இஸ்ரேலின் பெரிய சதி.. உள்ளே இருந்த வெடிப்பொருள்! லெபனானில் 5000 பேஜர்கள் வெடித்தது எப்படி? பகீர்
பெய்ரூட்: லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5,000 பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் திடீரென்று வெடித்து சிதறின. இதில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், 2750 பேர் காயமடைந்துள்ளனர். 100 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் ஒரே நேரத்தில் 5,000 பேஜர்கள் வெடித்த இஸ்ரேலின் உளவுத்துறையான ‛மொசாட்' செய்தி சதிச்செயல் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பேஜர்களில் ‛மொசாட்' உளவு அமைப்பு வெடிப்பொருளை வைத்து இந்த வெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்த போர் தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது.

தற்போது காசாவிற்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காசா பகுதியில் வசிக்கும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இஸ்ரேல் கேட்கவில்லை.
இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் உத்தரவுப்படி லெபனானில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இருப்பினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதல் என்பது இஸ்ரேலுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று ஒரே நேரத்தில் லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்து சிதறின. லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியே சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுத கும்பல் வைத்திருந்த பேஜர்களும் வெடித்து சிதறியுள்ளன. மொத்தமாக 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்து சிதறியுள்ளன.
இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 2,750 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த பேஜர் வெடிப்புக்கு ஈரான் நாட்டுக்கான லெபனான் தூதர் முஜிதாபா அமானி என்பவர் காயமடைந்ததாகவும், லெபனான் நாடாளுமன்றத்தின் ஹிஸ்புல்லா பிரதிநிதியான அலி அமாவின் மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு ஒரே நேரத்தில் இந்த பேஜர் தாக்குதலுக்கு அதில் இருந்து லித்தியம் அயன் பேட்டரிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
அதேவேளையில் பேஜர் வெடிப்பின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்று லெபனான் சந்தேகம் எழுப்பிய நிலையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் லெபனானில் எப்படி 5000 பேஜர்கள் வெடித்தது என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தை இஸ்ரேலில் இருந்தே அந்த நாட்டின் உளவு அமைப்பான ‛மொசாட்' பெரிய பிளான் செய்து அதனை பிசிறு தட்டாமல் செய்து முடித்துள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது இஸ்ரேலுக்கு, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தகவல் பரிமாற்றம் சாதனங்கள் பற்றிய விபரம் நன்கு தெரியும். இஸ்ரேலின் கண்காணிப்பை தவிர்க்க ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகமாக பேஜர்கள் தான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் போன் பேச முடியாமல் இருந்தாலும் கூட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மெசேஜ் அனுப்பி வைக்க முடியும். செல்போன் பயன்படுத்தினால் இஸ்ரேல் உளவு பார்க்கலாம் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் பயன்படுத்தி ருகின்றனர்.
இப்படி பேஜர்கள் மூலம் தான் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுத்து மெசேஜ் பாஸ் செய்து வருகின்றனர். இதனால் பேஜர் மூலம் அவர்களை தீர்த்து கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய பிளானை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தீட்டி அதனை செயல்படுத்தி உள்ளது.
அதாவது ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் தைவான் நாட்டின் தைபே நகரில் செயல்பட்டு வரும் கோல்ட் அப்பல்லோ எனும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பேஜர்கள் செல்கின்றனர். சமீபத்தில் அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தைவானிடம் இருந்து 5,000 பேஜர்களை ஹஸ்புல்லா அமைப்பினர் வாங்கி உள்ளனர். இந்த பேஜர்கள் தான் நேற்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளன. தற்போது வெடித்த பேஜரின் மாடல் என்பது AP924 வகையாகும்
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த பேஜரின் போர்ட்டுகளில் இருந்த 20 கிராமுக்கு குறைவான வெடிப்பொருட்கள் தான் என்று லெபனானின் பாதுகாப்பு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தைவானில் இருந்து வாங்கப்பட்ட பேஜரில் இஸ்ரேலின் மொசாட் வெடிப்பொருட்களை வைத்துள்ளது. பேட்டரியின் மற்றும் போர்ட் மீது வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பொருளை ஸ்கேனர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கண்டறிவது கடினம். '' என தெரிவித்துள்ளார்.

இன்னொரு லெபனான் அதிகாரி ‛ஸ்கை நியூஸ் அரேபியா' எனும் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛இஸ்ரேல் உளவுத்துறை பேஜரின் உள்ளே PETN (pentaerythritol tetranitrate) எனும் வெடிப்பொருளை பேட்டரிக்குள் வைத்துள்ளது. மேலும் பேட்டரியின் வெப்பத்தை உயர்த்தி அதனை இஸ்ரேல் உளவுத்துறை வெடிக்க வைத்துள்ளது'' என்றார். இதுதொடர்பாக லெபனான் நாட்டு பாதுகாப்பு துறை விசாரணையை தொடங்கி உள்ளது.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை சார்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. இருப்பினும் இஸ்ரேல் இப்படி செய்து இருக்குமா? என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்ரேல் இதுபோன்ற சம்பவத்தை இதற்கு முன்பு ஒருமுறை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் முன்னாள் உளவுத்துறை ஆய்வாளர் டேவிட் கென்னடி கூறுகையில், ‛‛1996ம் ஆண்டு ஹமாஸ் தலைவர் யஹ்யா அய்யாஷை கொலை செய்யப்பட்டார். அவர் தனது தந்தைக்கு செல்போனில் அழைத்தபோது அது வெடித்தது. இந்த செல்போன் வெடிப்புக்கு காரணம் அதன் உள்ளே இருந்த 15 கிராம் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து தான் காரணம். இதனை இஸ்ரேலின் அப்போதைய உளவு நிறுவனமான ஷின் பெட் ஈடுபட்டுள்ளது'' என்றார். இதனால் பேஜர் வெடிப்பின் பின்னணியிலும் இஸ்ரேலின் உளவு அமைப்பின் ‛மொசாட்' இருக்க அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கருதுகின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications