Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்னுட்டாங்க! அறிவித்த ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு புதிய வார்னிங்

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இறந்துள்ளார். இதனை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை உறுதி செய்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு ஹசன் நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா வார்னிங்கும் கொடுத்துள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் நாடுகளுடன் இஸ்ரேல் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இந்த 2 நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இதற்கிடையே தான் கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது.

israel hezbollah hassan nasrallah

இதற்கு அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காசா மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

ஒருபக்கம் காசாவில் போர் நடத்தி வரும் இஸ்ரேல் இன்னொரு புறம் ஹிஸ்புல்லாவினருக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த 10 இஸ்ரேலின் கவனம் ஹிஸ்புல்லாவின் பக்கம் திரும்பியது. இதனால் கடந்த 10 நாட்களாக இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது வலுவடைந்துள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு அடுத்தடுத்து பெரிய அதிர்ச்சியை இஸ்ரேல் கொடுக்க தொடங்கியது.

முதலில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வழக்கத்தை விட இஸ்ரேல் மீது லெபனானும், லெபனான் மீது இஸ்ரேலும் ஏவுகனை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் - காசாவை தொடர்ந்து இஸ்ரேல் - லெபனான் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவானது. இதற்கிடையே தான் நேற்றைய தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள தாஹியில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் நாட்டில் இருந்து லெபனானின் தாஹியில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லாவின் தலைமையமாக செயல்பட்ட அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானது. இந்த கட்டத்தில் தான் ஹிஸ்புல்லாவின் தலைவராக செயல்படும் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லா இருந்ததாகவும், அவரை டார்கெட் செய்து தான் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா இறந்தாரா? உயிர் பிழைத்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை. ஈரான் தரப்பில் ஹசன் நஸ்ரல்லா பாதுகாப்பாக இருப்பதாக சொல்லியது. ஆனால் இன்று காலையில் இஸ்ரேல் பாதுகாப்பு துறை ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

இத்தகைய சூழலில் தான் தற்போது ஹிஸ்புல்லா சார்பில் முக்கிய அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‛‛எங்களின் தலைவர் சையத் ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேலின் தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக அதேவேளையில் காசா, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த மோதலில் இருந்து ஹிஸ்புல்லா பின்வாங்காது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹிஸ்புல்லாவின் அதிகாரப்பூர்வ டிவி சேனலான Al-Manar-லிலும் ஹசன் நஸ்ருல்லாவின் மரணம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பில் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகளாக உள்ளனர். இதில் 17 பேரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இன்னும் டாப் தலைவராக உள்ள ஹசன் நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் அவரும் தற்போது கொல்லப்பட்டுள்ளார். இதன்மூலம் மொத்த ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் தீர்த்து கட்டியுள்ளது.

தற்போது ஹிஸ்புல்லா தலைவர் இன்றி தவிக்கிறது. இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தொடர்ந்து குடைச்சல் கொடுக்க அதன் தலைவராக செயல்பட்ட ஹசன் நஸ்ரல்லா தான் முக்கிய காரணமாக இருந்தார். இவர் கடந்த 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இறந்துள்ளார். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. அதேவேளையில் பெரும் தலைவலியாக இருந்த ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை இஸ்ரேல் கொண்டாடி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+