மனித - ஏலியனாக மக்கள் மனதில் வாழ்ந்த ஹாலிவுட் நடிகர் ‘ஸ்போக்’ நிமோய் மரணம்: ஒபாமா இரங்கல்

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா : ஹாலிவுட் படங்களில் மனித - ஏலியனாக நடித்து பிரபலமான நடிகர் லியோனார்ட் நிமோய் காலமானார். அன்னாருக்கு வயது 83. நிமோயின் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

1931-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்தவர் நிமோய். வித்தியாசமான முகத்தோற்றம் கொண்ட நிமோய், 8 வயதிலிருந்தே சின்ன சின்ன புரொடக்‌ஷன் கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்தார். கல்லூரி படிப்புக்குப் பின் ஹாலிவுட்டில் வாய்ப்புத் தேடிய நிமோய், சோடா கடை, கார் டிரைவர் என பகுதி நேர வேலைகள் மூலம் வருமானம் ஈட்டினார்.

இயற்கையிலேயே விசித்திரமான முக அமைப்பு கொண்டிருந்த நிமோயை, ‘ஸ்டார் ட்ரெக்' படம் பிரபலமாக்கியது. அப்படத்தில் அவர் மனித ஏலியனாக நடித்திருந்தார். இது தவிர ‘ட்விலைட் ஜோன்' டிவி நெடுந்தொடரும் மக்கள் மத்தியில் திறமையான நடிகர் என்ற பெயரை நிமோயிக்குப் பெற்றுத் தந்தது.

ஸ்போக்...

ஸ்போக்...

ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ஸ்போக். அப்படத்திற்குப் பின்னர் நிமோயின் ரசிகர்கள் அவரை ‘ஸ்போக்' என்றே அழைக்கத் தொடங்கினர்.

பலதுறை வித்தகர்...

பலதுறை வித்தகர்...

நடிப்பு மட்டுமின்றி கவிதை, புகைப்படம், இசை என்று பல துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார் நிமோய். ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தின் 3 மற்றும் 4-ம் பாகத்தை இயக்கிய இவர், 6வது பாகத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் பங்காற்றினார்.

நான் ஸ்போக் இல்லை...

நான் ஸ்போக் இல்லை...

இது மட்டுமின்றி 1977 நான் ஸ்போக் இல்லை என்றும் 1995-ல் நான் ஸ்போக் என்றும் தன்னை பற்றிய இரண்டு வரலாற்று நூல்களையும் நிமோய் எழுதியுள்ளார்.

நுரையீரல் கோளாறு...

நுரையீரல் கோளாறு...

வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிமோய், கடந்த வருடம் நுரையீரல் கோளாறால் பாதிக்கப் பட்டார். தொடர்ந்து அதற்கு சிகிச்சைப் பெற்று வந்த நிமோய், நேற்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.

திரையுலகினர் அஞ்சலி...

திரையுலகினர் அஞ்சலி...

மனித - ஏலியான் கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நிமோயின் மறைவிற்கு அவருடன் நடித்த வில்லியம் ஷார்ட்னர், ஜார்ஜ் டக்கி உட்பட திரையுலகக் கலைஞர்கள் பலர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒபாமா இரங்கல்...

ஒபாமா இரங்கல்...

நிமோயின் மறைவு குறித்து அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நான் ஸ்போக்கை நேசித்தேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+