டைட்டானிக் நாயகனின் கையை தட்டி விட்ட லேடி காகா... வைரலாகும் வீடியோ
கலிபோர்னியா: கோல்டன் விருது வாங்கப்போகும் அவசரத்தில் டைட்டானிக் பட நாயகன் லியனர்டோ டிகாப்ரியோவின் கையை பின்னால் இருந்து தட்டிவிட்டு சென்றார் லேடி காகா. விழாவில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்த லியனர்டோ டிகாப்ரியோ, காகாவின் செயலுக்கு புருவத்தை தூக்கி கொடுத்தாரே ஒரு எக்ஸ்பிரசன் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
73வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவின் பிவெர்லி ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. இந்த வண்ணமிகு விழாவில் 2015-ல் வெளியான சிறந்த படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் படத்தின் நாயகன் லியனர்டோ டிகாப்ரியோ பெற்றார். பிரபல பாடகி லேடி காகா, தொலைக்காட்சித் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றார்.
லேடி காகாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து மேடைக்கு நடந்து வந்தார். அப்போது டிகாப்ரியோவின் கை வழியை மறைத்துக் கொண்டு இருந்தது. அவரைக் கடந்துபோன காகா, கையைத்தட்டி விட்டு கடந்துவந்தார். அந்த நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்த டிகாப்ரியோ, இதனால் சில கணம் அதிர்ந்துதான் போனார். உடனே சமாளித்த டிகாப்ரியோ புருவங்களை உயர்த்தி சிரித்தார். இந்த உடல்மொழி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.












Click it and Unblock the Notifications